நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் கொண்டுசெல்வதே நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது என்று நிதி ஆயோக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப் பேற்றதும், மத்திய திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும் துணைத் தலைவராக ராஜிவ்குமாரும் உள்ளனர்.
நிதி ஆயோக்கின் நிர்வாகக்குழுவின் 4-வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களாக உள்ள அனைத்துமாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், சிலமத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ம் நிதி ஆண்டின் கடைசிகாலிறுதிவரை 7.7 சதவீதம் என்ற ஆரோக்கியமான நிலையில் இருந்துவருகிறது. இப்போது நாட்டின் முன் இருக்கும் முக்கிய சவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவது தான். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
புதிய இந்தியா எனும் இலக்கை வரும் 2020-ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை உண்டாக்கும்.
பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளம்சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளையும், நிதி உதவிகளையும் மத்தியரசு வழங்கும்.
கொள்கைகளை வகுப்பது, துணைக்குழுக்கள் உருவாக்குவது, ஸ்வச் பாரத் இயக்கம், டிஜிட்டல் பரிமாற்றம், திறன்மேம்பாடு ஆகியவற்றை சிறப்பாகக் கொண்டுசெல்ல மாநில முதல்வர்கள் தான் முன்னெடுக்க வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத்திட்டத்துக்காக 1.50 லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு திட்டம் கிடைக்கும். கல்விக்கான சமக்ரசிக்சா அபியானில் முழுமையான அணுகுமுறை அவசியம்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள முத்ரா திட்டம், ஜன் தன் யோஜனா, ஸ்டான்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் மிகப்பெரிய அளவுக்கு நிதி உள்ளீடுகளைக் கொண்டு வரும். சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை இந்தத் திட்டங்கள் போக்கும்.
இந்தியாவில் எந்த விதத்திலும் திறமைக்கோ, திறனுக்கோ, வளத்துக்கோ பற்றாக் குறை இல்லை. மாநிலங்களுக்கு நிதிவழங்குவது அதிகப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை ரூ.6 லட்சம் கோடி என்ற என்றநிலையில் இப்போது மாநிலங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி தரப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.