ஆழ்கடல் மீன்பிடி படகுகட்டுவதற்கு, நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா ரூ.40 லட்சம்வரை மானியம் வழங்கப்படும் என மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறினார்.
ராமேஸ்வரத்தில் நேற்று வேளாண்மை மற்றும் மீன்வளம் சார்ந்த நாடாளுமன்றக்குழு உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பர்ஷோத்தம்பாய் ரூபலா, இணை அமைச்சர்கள் கஜேந்திரசிங் ஷெகாவத், கிருஷ்ணராஜ், மத்திய பார்லிமென்ட் விவகாரம் மற்றும் குடி நீர் ஆதாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால், கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கமலாதேவி, ஹரி, அர்ச்சுனன், தபேஷ் மண்டல் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ராதாமோகன் சிங் பேசுகையில், ‘‘இந்தியாவில் மீன் உற்பத்தி 1.14 கோடிடன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் குறைவான மீன் உற்பத்தியே உள்ளதால், கடல் மீன் பிடிப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், கடல் அலைகள் குறைந்த பகுதியில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஐதராபாத்திலுள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்காக ரூ.1.14 கோடியை கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு வழங்கியுள்ளது. இத்திட்டம் கடலோர மாநிலங்களில் 14 இடங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. இது வெற்றிபெற்றால் கடலில் கூண்டு மீன் வளர்ப்பு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுவதற்கு 50 சதவீதம் மானியமாக (மீனவர்களுக்கு தலா ரூ.40 லட்சம்), 2017-2018ம் ஆண்டிற்கு ரூ.312 கோடி முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மீனவர்கள், மீனவர் சங்கங்கள் இதனை பயன் படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.
ஆய்வுக்கூட்டத்தில் மத்திய வேளாண்மைத்துறை கூடுதல் செயலாளர் பிரதான் கூறுகையில், ‘‘இலங்கை – இந்தியகடல் பகுதியில் மீன்பிடித்தல் விவகாரத்தில், நிரந்தர தீர்வுக்காக தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு, இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 1,602 தமிழக மீனவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையினால் விடுவிக்கப் பட்டுள்ளனர். படகுகள் அனைத்தையும் விடுவிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’’ என்றார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.