வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல

அசாமில் தயாரிக்கப் பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில்,  40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுயநலமாக செயல்படுவதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சிப்பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

அசாம் உடன்படிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் கையெழுத்து போடப்பட்டது. அப்போது தேசியகுடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் காங்கிரசாருக்கு எந்தபிரச்சினையும் இல்லை.

மேற்கு வங்காளத்தில் முந்தைய கம்யூனிஸ்டு ஆட்சியினருக்கு வங்கதேச ஊடுருவல் காரர்கள் வாக்கு வங்கியாக இருந்தனர். தற்போது அவர்கள் திரிணாமுல் காங்கிரசாரின் வாக்குவங்கியாக மாறிவிட்டனர்.

எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. நாட்டின் பாதுகாப்பைவிட வாக்கு வங்கிதான் முக்கியமா? என்பதை ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த பதிவேடு மூலம் வெளிநாட்டு அகதிகள் நாடு கடத்தப் படுவார்கள் என கூறப்படுவது தவறு. இதன்மூலம் அகதிகளுக்கு எதுவும் நேரிடாது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அகதிகளுக்கும், சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்து, சீக்கியர், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்காகவே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை (திருத்தம்) மசோதாவை கொண்டு வந்தது.

இங்கு, ‘வங்காளத்துக்கு எதிரான பா.ஜனதாவே வங்காளத்தை விட்டுவெளியேறு’ என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல. மாநிலத்தை தவறாக ஆட்சி செய்யும் மம்தாவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும்தான் எதிரி.

எனது உரையை மக்கள் கேட்காமல் இருக்க மாநில அரசு பலஇடங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பை இருட்டடிப்பு செய்துள்ளது. ஆனால் பா.ஜனதா தொண்டர்களே எனது உரையை மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டுசேர்ப்பார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...