வாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்

வாஜ்பாயின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று என்றால், அது கண்டிப்பாக தங்க நாற்கர சாலையாக தான் இருக்கும். இந்த சாலைதான் தற்போது இந்திய தேசியபோக்குவரத்திற்கு அடித்தளமாக உள்ளது. சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் இந்தசாலை தற்போது சிறு சிறு நகரங்களுக்கும் நீண்டு செல்ல இவர் தான் காரணம்.

அரசு நிறுவனங்கள் சிலவற்றை தனியார் மயமாக்கி, தனியார் மயத்திற்கு வித்திட்டது இவர்தான். ஆம், அப்போது மூழ்கும் நிலையில் இருந்த சில அரசு நிறுவனங்களை, தனியாருக்கு கொடுத்து, அதைகாப்பாற்றியது இவர்தான். ஹிந்துஸ்தான் சின்க், பாரத் அலுமினியம் கம்பெனி, இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை தனியாருக்கு அளித்தார்.

இவருடைய ஐந்து ஆண்டு ஆட்சியில் தான் இந்தியாவின் ஜிடிபி மிகவும் நிலையாக இருந்தது. அதேபோல் இவருடைய ஆட்சியில் சராசரியாக இந்தியாவின் ஜிடிபி உயர்ந்துகொண்டே சென்றது. அதேபோல் 1998ல் இருந்து அடுத்த ஐந்து வருடம் இந்தியாவின் நிதியாண்டு அறிக்கை மிகவும் நிலையாக இருந்தது.

இவரது ஆட்சியில்தான் தொலைத்தொடர்பு துறை அசாத்திய மாற்றத்தை கண்டது. கட்டண முறைகளை மாற்றி ஏல முறைகளை அறிமுக படுத்தினார். அதேபோல், பிஎஸ்என்எல் இவரால்தான் பெரிய வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் 2ஜி நெட்வொர்க் எப்படி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் இவர் டெலிகாம் துறையில் கொண்டுவந்த சட்டங்கள் பெரியமாற்றத்தை ஏற்படுத்தியது.

சர்வசிக்ச அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி என்று இவர் கொண்டுவந்த திட்டம்தான் இந்தியாவில் கல்வியில் பெரியபுரட்சியை கொண்டு வந்தது. கல்வி செல்லாத வடமாநில கிராமங்களில், கல்வியை கொண்டுசெல்ல இந்த திட்டம் உதவியது. இந்த திட்டம் வந்த 4 ஆண்டுகளில் பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களில் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...