மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை முன்னிட்டு, நமோ ஆப்மூலம் அவர் பேசியதாவது: தூய்மை இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே புதியதிட்டத்தின் இலக்கு. இன்று முதல் காந்தி பிறந்தநாள் வரை, மகாத்மாவின் கனவை நிறைவேற்ற நம்மை அர்ப்பணித்து கொள்வோம். 4 வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தூய்மை இந்தியாதிட்டம் இன்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
இந்ததிட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர் என்பதை பெருமையாக நாம்கருதலாம். தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. சமூக மாற்றத்திற்கான தூதர்களாக இளைஞர்கள் திகழ்கின்றனர். தூய்மை குறித்து அவர்கள் செய்தபணி பாராட்டுக்குரியது. இந்தியாவில் நேர்மறையான மாற்றத்தில் இளைஞர்கள் பங்கு அதிகம் உள்ளது. தூய்மையான இந்தியா நோய்களைவிரட்டும். அனைவரும் இந்த திட்டத்தில் இணையவேண்டும் என அழைக்கிறேன். தேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.