ரஃபேல் ஒப்பந்தம், 15 தொழிலதிபர்களின் கடன்தள்ளுபடி என ஒவ்வொரு விஷயத்திலும், கோமாளியைப் போல் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்கூறி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, வாராக்கடன் தொகை, ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்தது காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மைகளை அவர்கள் மூடிமறைத்து விட்டனர். மேலும், கடன் சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் நிதி மோசடியாளர்கள் காப்பாற்றப் பட்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சொத்து தரமதிப்பீட்டுக் குழு, வாராக் கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது தான், நாட்டின் உண்மையான வாராக்கடன் ரூ.8.96 லட்சம் கோடி என்று தெரிய வந்தது.
இந்த வாராக் கடன் அதிகரிப்புக்கு தற்போதைய மத்திய அரசு காரணமல்ல. மேலும், வாராக் கடனை வசூலிப்பதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தவொரு ஆக்கப் பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க வில்லை. வங்கியில் வாங்கப்பட்ட கடனுக்கு முறையாக தவணை தொகைகள் செலுத்தப்பட வேண்டும். 90 நாள்களுக்கு மேல் கடன்நிலுவை செலுத்தப்படா விட்டால், அந்தக்கடன் வாராக்கடனாகக் கருதப்படும். மோசடியாளர்களின் சொத்துகளை ஏலம்விட்டு கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, வங்கி திவால் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், 12 முக்கிய கடனாளிகளை ரிசர்வ்வங்கி கண்டறிந்துள்ளது. பல்வேறு வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் நிலுவை, வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சம் கோடியாக கணக்கிடப் பட்டுள்ளது. இந்நிலையில், ராகுல்காந்தி தொடர்ந்து பொய் கூறுவதால், யதார்த்த உண்மைகளை அவரால் மாற்ற முடியாது
நன்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.