அறிவும், கல்வியும் புத்தகங்களோடு கட்டுப் படுத்தப்பட வேண்டியவை அல்ல. கல்வியின் நோக்கம், ஒருநபரின் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் சமநிலையிலான வளர்ச்சியை அடையச் செய்வதுதான். புதுமை என்பது இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியப்படாது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், புதுமையும் முக்கியம்.
முழுமையான கல்விதான் நம்மை மனிதர்கள் ஆக்குகின்றன என்று சுவாமி விவேகானந்தர் வலியுறுத்திகூறி இருக்கிறார். நம்முடைய பாரம்பரியமிக்க பல்கலைக் கழகங்களான தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலம் ஆகியவை அறிவுக்கு இணையான முக்கியத் துவத்தை புதிய கண்டுபிடிப்புகளுக்கும் கொடுத்தன.
பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் மாணவர்களுக்கு அறிவை தருவதுடன், நாட்டின் நலனையும் போதிக்கவேண்டும். நன்னடத்தையையும் கற்பிக்க வேண்டும். அம்பேத்கர், தீன தயாள் உபாத்யாயா, ராம் மனோகர் லோஹியா போன்றவர்கள் படிப்பைவிட நன்னடத்தையையே போதித்தனர். ஆரோக்கியமான கல்வியே புதிய இந்தியாவுக்கான திறவுகோல்
புதுமை என்ற ஒன்று இல்லாவிட்டால், நாம் வாழ்கிற இந்த வாழ்க்கை ஒரு சுமையைப்போல தோன்றும். இந்திய பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் நாங்கள் எதிர்கொள்கிற சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு எங்களுக்கு உதவும். நாம் நமது கல்வி நிறுவனங்களை ஒன்றுக்கொன்றுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்கள் வகுப்பறையில் படிக்கிற கல்வியை, நாட்டின் எதிர்பார்ப்புகளுடன் இணைக்க வேண்டும். குழந்தைகளை புதுமையை நோக்கி ஊக்குவிக்கவும், உயர் கல்வியைப் பெறவும், எழுச்சி பெறவும் ‘அடல் டிங்கரிங் லேப்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு கல்வியில் உள்ள கட்டமைப்பு மற்றும் முறைமைகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும்.
சமூகத்து நல்ல ஆசிரியர்களை தயார்ப்படுத்தி அளிப்பதுவும் முக்கியம். எண்ணியல் கல்வியை பரப்புவதற்கும், அரசு திட்டங்கள் குறித்து பெரிதான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிஞர்களும், மாணவர்களும் பொறுப்பேற்க வேண்டும். இளைய தலைமுறையினர் இந்தியாவுக்கு உலகளாவிய அடையாளத்தை தந்துள்ளனர் .
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.