மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த அருங்காட்சி யகத்திற்கு வந்த மோடி, காந்தியின் திருவுருவ சிலைக்கு மரியாதைசெய்தார். அத்துடன் காந்தியின் 150வது பிறந்த தினம் குறித்து கூறியுள்ள பிரதமர், காந்தியின் கனவை இந்தியா பூர்த்திசெய்து வருவதாக தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி இந்தியாவை கடிதங்கள் மற்றும் ஆன்மாவின் மூலமாகவும் எண்ணங்கள் மற்றும் செயல்களால் இணைத்தவர் என்று கூறியுள்ளார்.
அத்துடன் சர்தார் வல்லபாய்பட்டேல் கூறியதாக குறிப்பிட்டுள்ள மோடி, “இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. ஆனால் இந்த இடத்திலும் நம்முள் பன்முகத்தன்மை ஏற்பட்டதில்லை. மக்களிடையே ஒற்றுமை, காலணி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுடன் உலக அளவில் இந்தியா ஒற்றுமையால் உயர்ந்துநிற்கின்றது என்றால், அது காந்தியால்தான். அவர் இதை இந்தியாவில் மட்டும் செய்யவில்லை. தென்னாப் பிரிக்காவிலும் நிகழ்த்தியுள்ளார். காந்தியின் தலைமையை உணர்ந்தால், அவர் ஒருமகத்துவமானவர் என்பது புரியும். அவர் இறுதி மூச்சு இருக்கும்வரை ஒழுக்கத்தை கடைபிடித்தவர். 21ஆம் நூற்றாண்டில் உலகில் உள்ள பலபிரச்னைகளுக்கு காந்தி தீர்வளித்துவிட்டுச் சென்றுள்ளார். உலகில் உள்ள பயங்கரவாதம், தீவிரமயமாதல், தேசத்திற்கு எதிராக செயல்படுதல் என அனைத்துக்கும் ஒரேதீர்வாக, அகிம்சையின் வழி மக்களை இணைக்க காந்தி கற்றுக்கொடுத்துள்ளார்” என்றார்.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.