பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் முன்னாள் எம்எல்ஏ. கலிவரதன் ஆகியோர் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
அப்போது பா.ஜனதா தேசியசெயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமரின் தனி நபர் கழிவறை, இலவசகேஸ் இணைப்பு, இலவச வீடு கட்டும் திட்டம், பயிர்கடன் திட்டம், மருத்துவ காப்பீடு ஆகிய திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் குறைக்க வேண்டும்.
இந்து கோவில்களின் வருமானத்தை முழுமையாக எடுத்துக்கொள்ள சட்டத்தில் இடமில்லை. வருமானத்தில் 18 சதவீதம்தான் தொகுப் பூதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி தொகையை வருமானமில்லாத நலிவுற்ற கோவில்களின் வளர்ச்சிக்காக செலவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்ள திமுக. மற்றும் தமிழ் தேசியகட்சிகள் எதிர்ப்பது சரியல்ல. ஹைட்ரோ கார்பன் எடுக்க டி.போர்வெல் என்ற முறையில் எடுக்க அனுமதித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் குறைவதற்கோ, விவசாயம் பாதிக்கும் என்றோ அச்சப்பட தேவையில்லை.திருமுருகன் காந்தியை ஸ்டாலின் சந்தித்தது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.