நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தீபாவளிக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. காற்றில் மாசுகலப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாடுமுழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் சிக்ரி, அசோக்பூஷண் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பட்டாசு வெடிப்பதன்மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பலஆயிரம் குடும்பங்களையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடைவிதிக்க முடியாது.
இருப்பினும் பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசிய மாகிறது. சுற்றுச் சூழலுக்கு அதிகமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்ககூடாது. அதிகசப்தம் மாசு ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். லைசென்ஸ் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும். டில்லியில் அமலில் இருந்த தடையும் நீக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கப்படுகிறது.
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தங்களிடம் 2 ஆண்டுகளுக்கு தேவையான பட்டாசுகள் கையிருப்பில் உள்ளதாகவும். கோர்ட் உத்தரவால் விற்பனைதப்பியது என்றும் கூறியுள்ளனர்.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.