சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேல்

இந்து -முஸ்லீம் என்று மத அடிப்படையில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உருவான போது..இந்திய பகுதிக்குள் சிதறுண்டு கிடந்த சிறுசிறு சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு வல்லபாய் படேலினுடையதாக இருந்தது.

சமஸ்தானங்கள் அனைத்தும் சுமுகமாக இந்தியாவுடன் இணைய சம்மதித்த நிலையில் 3 மட்டும் முரண்டுபிடித்தன. அதில் ஒன்றுதான் ஹைதராபாத். அன்றைய ஹைதராபாத் மாகாணம் என்பது.. தெலுங்கானா மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் சிலபகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக இருந்தன.

சமஸ்தான மன்னர் நிஜாம் முஸ்லீம். ஆனால், மக்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்.

ஹைதராபாத் நிஜாம், இந்தியாவுடன் இணைய விரும்ப வில்லை என்றும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் commonwealth நாடு போல தொடர விரும்புவதாகவும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல நேருவிற்கு இதை சமாளிக்க தெரியவில்லை. காஷ்மீரைபோல , தனி அந்தஸ்து கொண்ட நிலப்பரப்பாக ஹைதராபாத் இயங்குவதற்கு சம்மதித்திருந்தார் நேரு !

அது மட்டும் நடந்திருந்தால்..இந்தியாவின் மத்தியபகுதியில் .. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிறைந்த இன்னொரு காஷ்மீராக ஹைதராபாத் மாறி இருக்கும் ! பல உயிர்களை இன்றளவும் பலி வாங்கிக் கொண்டிருக்கும் !

நிஜாம் அதோடு நிற்கவில்லை. கோவா-வை வாங்கி தன்னுடைய கடல் வழிப் பாதையை அமைத்துக் கொள்ள திட்டம்தீட்டினார். மேலும், பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வரவழைத்து…இந்தியாவிற்கு எதிராக போராட தயாரானார். அழுத்தம் அதிகரித்தபோது …பாகிஸ்தானுடன் இணைய விரும்புவதாக அறிவித்தார்.

ஆக…நேருவின் இயலாமையை பறைசாற்றும் காஷ்மீர் போன்ற குழப்பமான தனி அந்தஸ்தையும் நிஜாம் ஏற்று கொள்ள வில்லை !

இந்தியாவின் நட்ட நடுப்பகுதியில் இருந்துகொண்டு.. பாகிஸ்தானுடன் இணைவேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்!

ஹைதராபாத் சமஸ்தானத்தின் மக்களோ 90% இந்துக்கள்.

நேரு செய்வதறியாது முழித்து கொண்டிருந்த நிலையில், சிலமாதங்கள் வரை பொறுத்துப்பார்த்த படேல் தான்… ராணுவத்துடன் சென்று நான்கே நாட்களில் நிஜாமின் படையை முறியடித்து ..நிஜாம் சம்மதித்து போட்ட கையெழுத்து கொண்டு ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்தார்.

மத அடிப்படை யிலான இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த இந்த இருபக்க செயல்பாடுகளை….முஸ்லீம் மக்களை கொன்றார் படேல் என்று சற்றே மடைமாற்றி சொல்வது.. ..அரசியல் வாக்குவங்கிக்காக….இந்து -முஸ்லீம் பிரிவினையை அணையாமல் தூண்டிக் கொண்டிருக்க உதவும். அவ்வளவுதான்.

பானு கோம்ஸ்

One response to “சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேல்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...