பாஜகதான் வளர்ச்சியின் பயன்கள் கடைக் கோடி மக்களை சென்றடைவதை உறுதிசெய்துள்ளது


 சத்தீஸ்கர் சட்ட பேரவைக்கு 12, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ராய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா, மாநில முதல்வர ரமண் சிங் ஆகியோர் வெளியிட்டனர். அந்தத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


 சத்தீஸ்கரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தை நக்ஸலைட் தீவிரவாதம் இல்லா மாநிலமாக மாற்றுவோம். சத்தீஸ்கரில் சிறு, குறு விவசாயிகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட நிலமில்லா தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்குவோம். அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 2 லட்சம் புதியபாசனநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
 விவசாய பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை ஒன்றரை மடங்கு உயர்த்தப்படும். விவசாயிகளிடம் இருந்து பருப்புகள், பயறுகள் ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதரவுவிலையில் மாநில அரசு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். சத்தீஸ்கரை விவசாய பொருள் உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


 பெண்கள் புதிதாக தொழில்தொடங்க ரூ.2 லட்சமும், சுய உதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சமும் கடனாக வழங்கப்படும். அம்பிகாபூர், ஜெகதால்பூரில் பல்நோக்கு மருத்துவமனைகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகள் அமைக்கப்படும். ஹிந்தி, சத்தீஸ்கர் மொழிகளை ஊக்குவிக்க புதிய பல்கலைக் கழகம் அமைக்கப் படும். ஓய்வூதிய தாரர்களின் மருத்துவ செலவுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அளிக்கப்படும். சத்தீஸ்கர் மாநிலம், சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். சத்தீஸ்கரில் புதிய திரை நகரம் (பிலிம் சிட்டி) உருவாக்கப்படும். பால் உற்பத்தியில் புதிய புரட்சி உருவாக்கப்படும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கோசாலைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.


 தேர்தல் அறிக்கை வெளியிட்டு அமித் ஷா பேசியதாவது: சத்தீஸ்கரை ஆளும் ரமண் சிங் தலைமையிலான அரசு, மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதத்தை ஏறத்தாழ கட்டுப்படுத்திவிட்டது. நக்ஸல் தீவிரவாதத்தை புரட்சிக்கான அடையாளமாக பார்த்தகட்சியினர் (காங்கிரûஸ குறிப்பிட்டார்), சத்தீஸ்கருக்கு எந்த நல்லபணிகளையும் செய்யவில்லை. ஆனால் பாஜகவோ, ஏழைகளுக்கும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார வசதி, கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை அளித்து புரட்சியை செய்துள்ளது.


 நாட்டை 55 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. ஆனால் பாஜகதான் வளர்ச்சியின் பயன்கள், நாட்டில் கடைக் கோடியில் இருக்கும் மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்துள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பினரையும் கலந்தா லோசித்தேத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ரமண் சிங் செயல்படுத்தியுள்ளார். அதே போன்று இந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப் படும் என உறுதியளிக்கிறேன். சத்தீஸ்கர் மாநிலம் முன்பு வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது மின் சாரம், சிமெண்ட், உருக்கு உற்பத்தி மைய மாகவும், கல்வி மையமாகவும் உருவெடுத்துள்ளது என்றார் அமித் ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...