கருப்புபணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்தியஅரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ளநிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின்பொருளாதாரம் சீரழிந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.
ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தகுற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாய படுத்தி உள்ளார். சத்தீஸ்காரின் பிலாஸ்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசியவர், இது தொடர்பாக கூறியதாவது:-
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை குறை கூறுவது முட்டாள்தனமானது. ஏனெனில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தான் நாட்டில் இருந்த போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன் விளைவாக தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும், ராகுல்காந்தியும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது.
நாட்டின் வளர்ச்சிக்காகவே பா.ஜனதா பாடுபட்டுவருகிறது. இதனால் பா.ஜனதாவுடன் எப்படி போட்டியிடுவது? எனத்தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பி இருக்கின்றன. காங்கிரசில் அரசியல் தொடக்கமும், முடிவும் ஒரேகுடும்பம்தான். ஆனால் எங்கள் அரசியலோ ஏழைகளின் குடிசையில் தொடங்குகிறது.
வாழ்வோ, சாவோ நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒருதலைமையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெறவில்லை. அந்த வகையில் சத்தீஸ்காரில் காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், தற்போதைய வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கு 50 ஆண்டுகள் தேவைபட்டு இருக்கும்.
ஏழைகளுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் ஒவ்வொரு ரூபாயிலும், வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி எவ்வளவு உண்மையுடன் கூறியிருக்கிறார்? அந்த மீதமுள்ள 85 பைசாவை உறிஞ்சுவது ‘கை’தான் (காங்கிரஸ் கட்சியின் சின்னம்).
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.