என் வாக்குசாவடி வலுவான வாக்குச்சாவடி

நாடாளுமன்ற தேர்தலைமுன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி ஆலோசனை நடத்தி அறிவுரையும் வழங்கி வருகிறார். “என் வாக்குசாவடி வலுவான வாக்குச்சாவடி” என்றபெயரில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், கட்சிசார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

அந்தவகையில், தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட 5 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் நாளை (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட இருக்கிறார். மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்தநிகழ்ச்சியில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 1,000 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதற்காக, அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளில் தனித்தனியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கன்னியா குமரி தொகுதியில் நாகர்கோவிலில் உள்ள பெருமாள் திருமணமண்டபமும், கோவை தொகுதியில், சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் அரங்கத்திலும், சேலம்தொகுதியில், அம்மாபேட்டை சிவாஜி நகரில் உள்ள வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியிலும், நாமக்கல் தொகுதியில், பொம்மக்குட்டை மேடுகவின் மஹாலிலும், நீலகிரிதொகுதியில், ஊட்டி எங்படுகா அசோசியேஷன் ஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 2 பேர் வீதம் பிரதமர் மோடியிடம் கேள்விகேட்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மோடி கட்-அவுட் அருகே நின்று செல்பி எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடியின்பேச்சை, தமிழ் மொழியிலும் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முழு வீச்சில் தயாராகி வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏற்கனவே பொறுப்பாளர்களை நியமித்து விட்டோம். 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பூத்கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...