மேகதாது அரசியல் செய்யாமல் குமாரசாமியை சந்திக்கலாம்

ஐந்து மாநிலங்கள் நடைபெற்ற தேர்தலில் பாஜக சற்றுபின்னடைவை சந்தித்திருந்தாலும் 2019 பாராளுமன்றத் தேர்தலில் அந்த 5 மாநிலங்களிலும் பாஜக அதிகளவில் வெற்றி பெறும் என தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்லார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரை பத்து ரூபாய்க்குமேல் மத்திய அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. கடந்தகால ஆட்சிகளில் இதுபோன்று பெரிய அளவில் விலையை குறைத்தது இல்லை.

மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது பெரியநாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. பேட்டரிகார் தயாரிப்பு ஐந்து இடங்களில் எத்தனால் தொழிற்சாலை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது பெட்ரோல் டீசல்விலை பெருமளவு குறையும்

கஜா புயல் பாதிப்பு குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி உடனடியாக மத்திய குழுவை அனுப்பியதுடன் மின்பாதிப்புகளை சரிசெய்ய 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். தற்போது சீரமைப்பு பணிகளுக்காக 6,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. கஜாபாதிப்பில் அரசியல் செய்யாமல் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே மத்தியரசின் நிலைப்பாடு.

மேகதாது பிரச்சினையில் ஸ்டாலின், திருநாவுக்கரசு ஆகியோர் அரசியல்செய்யாமல் கர்நாடக முதலமைச்சர் குமார சாமியை சந்தித்து மேகதாது திட்டத்தால், தமிழகம் பாதிக்கப்படும் என கூறவேண்டும்

சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்தித்தபோது மேகதாது பிரச்சினை குறித்து பேசியதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கு அவர்கள் என்னபதில் சொன்னார்கள் என்பது குறித்து மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.