திட்ட அறிக்கை தயாரிப்பு அணையைக் கட்டுவதாகாது

மேகேதாடு அணை நீர் விவசாயத்திற்கு பயன்பாடுத்தப் படாது
என்று உறுதிதர தயார்.

….. கர்நாடக அமைச்சர் சிவகுமார்!

காவிரி நதி நீர் ஆணையமும் – ஒழுங்காற்று வாரியமும் அமைக்கப்பட்ட பிறகு காவிரி நதி மற்றும் நதியின் குறுக்கே அமைந்துள்ள அணைகள் மீதான உரிமை கர்நாடக அரசுக்கு இல்லை!
பராமரிப்பு பணிகள் கூட கர்நாடக அரசின் பொறுப்பில் இல்லை .

இந்த நிலையில் தான் உரிமை கொண்டாட முடியாத நதியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை உண்டா என்பதே
அடிப்படை கேள்வி! உரிமை இல்லாத கர்நாடக அரசின்
உறுதி மொழி சட்ட விரோத செயல்களைப் புரிகின்றவர் தருகிற சான்றிதழ் போன்றதுதான்!

மேகேதாடுவில் அணையைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் வாரியம் அனுமதி அளித்ததை எதிர்த்து
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ” திட்ட அறிக்கை தயாரிப்பு அணையைக் கட்டுவதாகாது ” என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது!

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டிய — எழுப்ப வேண்டிய கேள்வி — காவிரி நதிநீர் ஆணையம் அமைந்த பிறகும் கூட காவிரி நதி தொடர்பாக கர்நாடக அரசு உரிமை கொண்டாடுவது சரியா?
இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது அல்லவா? என்பதாகவே இருக்க வேண்டும்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு காவிரி நதி நீர் பங்கீட்டுக்கு மட்டுமானதா
அல்லது காவிரி நதி நான்கு மாநிலங்களுக்கும் சொந்தமானது என்பதற்குமானதா?

நதியின் நீர் பங்கீட்டுக்கு மட்டுமே உரிமை என்று வைத்துக் கொண்டாலும் நதியின் ஆரோக்கியமும் நீர் வரத்தும் பிரித்துப் பார்க்க முடியாத தொடர்பு உடையவை.

புதிய அணையைக் கட்டி அல்ல ;நதியின் போக்கை மாற்றக்கூடிய எந்த நடவடிக்கையும் நீர் பங்கீட்டின் அளவை பாதிக்கும் அபாயம் இருக்கிறது — அதனால் காவிரி நதி நெடுகிலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மறைமுக உரிமை உண்டு.

அதனால் , தமிழக அரசு கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிரான பிரச்சனையாக அல்லாமல் தனது உரிமைக்கான பிரச்சினையாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்!.

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற ...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் திமுக -வினர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர் – அண்ணாமலை புகார் தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து ...

உர மானிய திட்டம் – மத்திய அமைச ...

உர மானிய திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் விவசாயிகளுக்கு பெரும் பலனளிக்கும் வகையில், டி.ஏ.பி., எனப்படும் டை ...

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் ...

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் ஆலோசனை தோஹா, கத்தாரின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான ஷேக் ...

விவசாயிகளின் நலனை மோடி மேம்படு ...

விவசாயிகளின் நலனை மோடி மேம்படுத்துவதில் பாஜக அரசு முழு ஈடுபாட்டுடன் உள்ளது – பிரதமர் மோடி '' விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் பா.ஜ., அரசு முழு ...

2025-ல் சீர்த்திருத்தங்கள் நிகழும ...

2025-ல் சீர்த்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் – ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிய 2025ம் ஆண்டை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக ...

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ...

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் சென்றது? அண்ணாமலை கேள்வி 'கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...