போபர்ஸ் உங்களை ஆட்சியில் இருந்து விரட்டியது; ரஃபேல் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும்.

ரபேல் விமானதயாரிப்பு பணியை ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு தரவில்லை என காங்கிரஸ் கட்சி முதலைக்கண்ணீர் வடிக்கிறது. அந்நிறுவனத்தை மேம்படுத்த உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்நிறுவனம் வளர வேண்டும் என விரும்பியிருந்தால் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதில் முதலீடுகள் செய்திருக்க வேண்டும். நிபுணர்கள் உதவியுடன் வளர்ச்சிக்கு எதாவது செய்திருக்க வேண்டும். இதில் எதுவுமே நீங்கள் செய்யவில்லை

பிரதமர் மோடியை விமர்சிக்க காங்கிரஸ்க்கு எந்த தகுதியும் இல்லை. பிரதமர் மோடியை திருடன் என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அன்று நான் அவரை தற்காத்துக்கொள்ள வாதிட்டேன். ஆனால் அன்று நீங்கள் என்னை அமரும்படி தெரிவித்தீர்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்ததால் அது கவனிக்கப்படவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதிகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் ரபேல் விவகாரம் குறித்து தெளிவுபடுத்துங்கள் என்று அவர்கள் கூறும்போதும் மட்டும் என்னையும் உறுப்பினர்களையும் பேச விடுகிறீர்கள். பிரதமரை திருடன் என்று கூறியபோது எங்களை பேச விட்டீர்களா ? திருடன் என்று என்னைப் பார்த்து கத்தினார்கள். அப்போது நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா ?.

பிரதமர் மோடி உட்பட நாங்கள் யாரும் ராஜகுடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்துதான் வந்துள்ளோம். எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதையும் எங்கள் மீது ஏரோப்ளேன் பேப்பர் வீசுவதுமாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் செயல்களை நிறுத்தவேண்டும். பிரதமரை அனைவரின் முன்னிலையில் கட்டிப்பிடித்து பின்னர் இடத்திற்குச் சென்று கண்ணடிப்பது எங்களுக்கு அவமானம் இல்லையா? அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள்.

நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விமானத்தை வாங்க விருப்பவில்லை.

தாங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காது என தெரிந்ததால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளி இந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு பாஜக அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஒப்பந்தம், பேச்சுவார்த்தை என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் அக்கறை காட்டுவதில்லை.. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டையநாடுகள் ராணுவ போர்த்தள வாடங்களை அதிகரித்து வந்தது. நண்பர்களை மாற்ற முடியும் , ஆனால் அண்டைய நாடுகளை நாம் மாற்ற முடியுமா ? கடந்த 2005 முதல் 2015 வரை சீனா 400 ராணுவ விமானங்கள் வாங்கியுள்ளன. இந்த நிலையில் நாமும் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. கார்கில் போருக்கு பின் நமது ராணுவ பலத்தை அதிகரிக்கவேண்டிய நிலை வந்தது. காங்கிரசை தோல் உரிக்கும் விதமாக உண்மைகள் உள்ளன. தேசிய பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். ஆனால் காங்கிரஸ் ரபேல் விவகாரத்தில் தடையாக இருந்து வந்துள்ளது.நாட்டின் பாதுகாப்பிற்காகவே ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் தயாராகும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வந்து சேரும். ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது.

பாதுகாப்புதுறை டீலில் வேறுபாடுகள் இருக்கலாம். டீல் என்பது பாதுகாப்பானது. காங்கிரஸ் பார்லியில் ஒரு விதமாகவும், வெளியில் ஒருவிதமாகவும் பேசுகிறது. நாட்டு மக்களுக்கு தவறான தகவலை காங்கிரஸ் தருகிறது. காங்கிரஸ் அரசைக் காட்டிலும் பாஜக அரசு ரஃபேல் விமானங்களுக்கு வழங்கும் விலை குறைவுதான். ரூ.526 கோடி என்ற அப்போதைய விலையை இப்போதைய விலையான ரூ.1,600 கோடியுடன் ஒப்பிடுவது என்பது, ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பிடுவதற்கு சமமாகும்.

2007-இல் நிர்ணயிக்கப்பட்ட அதே விலை 2017-ஆம் ஆண்டிலும் நீடிக்குமா? கால மாற்றத்தின் விலை ஏற்றத்தாலும், கரன்ஸி மதிப்பு மாற்றத்தாலும் அந்த விலையில் வேறுபாடு இருக்கும். அத்துடன் வெறும் விமானத்துக்கு மட்டுமான விலையையும், ஆயுதங்களுடன் கூடிய விமானத்தின் விலையையும் ஒப்பிட முடியாது

எச்.ஏ.எல். நிறுவனம் மேம்படுத்த மத்திய அரசு 1 லட்சம் கோடி ஒதுக்கியது. எச்.ஏ.எல். நிறுவனத்தை மேம்படுத்த காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.ரபேல் விமானங்கள் 126 க்கு பதிலாக மோடி அரசு 36 விமானங்கள் மட்டுமே வாங்குகிறது என்று நாட்டுக்கு தவறான தகவலை காங்கிரஸ், தருகிறது. நாங்கள் வாங்கும் 36 விமானங்களுமே பறக்கும் நிலையில் உள்ளவை. ஆனால் நீங்கள் (காங்.,) 18 விமானங்களைத்தான் பறக்கும் நிலையில் வாங்க திட்டமிட்டீர்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி பாதுகாப்புத்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. போஃபர்ஸ் ஒப்பந்தம் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஏனெனில் அது ஒரு ஊழல்; ரஃபேல் அப்படியல்ல. போஃபர்ஸ் உங்களை வீழ்ச்சியடைய வைத்தது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் மோடியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...