நாட்டில் உள்ள திறமையான இளைஞர்களின் கனவு களையும், விருப் பங்களையும் நிறை வேற்றுவதில் பாஜக உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி வியாழக் கிழமை தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்று வதற்காக பாஜக இளைஞரணி பிரசாரம் வியாழக் கிழமை தொடங்கியது. நாட்டில் உள்ள இளம் வாக்காளர்களை கவரும் வகையில், 17 விதமான நிகழ்ச்சிகளை நாடுமுழுவதும் நடத்துவதற்கான பிரசாரக் கூட்டத்தை பாஜக இளைஞரணி தலைவர் பூனம் மகாஜன் தொடங்கிவைத்தார். மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு இந்த பிரசாரம் தொடங்கியது.
இதையொட்டி, பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நாட்டில் உள்ள இளைஞர்களை பாஜகவுக்கு ஆதரவாக திரட்டும்நோக்கில் வெற்றி2019 என்ற கருத்தாக்கத்தை கொண்டு பாஜக இளைஞரணி பிரசாரம் தொடங்கி யதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன். திறமையான இளைஞர்களின் விருப் பத்தையும், கனவையும் நிறை வேற்றுவதில் பாஜக உறுதி கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.