ஊழல் கறை படிந்தவர்களும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வோரும் தப்பிக்கமுடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்தார்.
முதலில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம், கொடதாராய் நகரில் நடந்த பாஜக பிரச்சாரகூட்டத்தில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:
விவசாய கடன் தள்ளுபடி என்று கூறி சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகளில் விவசாயகடன் வாங்கியவர்களின் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேசிய வங்கிகளில் கடன்வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. சில விவசாயிகள் தனியாரிடம் கடன் பெற்றுள்ளனர். அவர்களின் நிலை என்ன? காங்கிரஸ் கட்சி விவசாயிகளை ஏமாற்றுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து சத்தீஸ்கர் அரசு விலகியுள்ளது. இதனால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏழைகளின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறது. இதனால் வறுமை வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவரின் குடும்பத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜாமீன் அல்லது முன் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி சென்றார். அங்கு ரூ.1,938 கோடியில் 41.7 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் தேசியநெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சிட்பண்ட் மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள், அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வோர்தப்பிக்க முடியாது. லட்சக் கணக்கான மக்களின் பணத்தை கொள்ளையடித் தவர்களுக்கு ஆதரவாக ஒரு முதல்வர் (மம்தா பானர்ஜி) தர்ணாவில் ஈடுபட்டது இதுவே முதல் முறை. பிரதமர் பதவி மீது அவருக்கு ஆசை உள்ளது. மேற்கு வங்க மக்கள் நலனில் அவருக்கு அக்கறை கிடையாது. அவரது ஆட்சியில் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.