உலகையே திரும்பிப்பார்க்க வைத்தோம்

இந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது.

உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜோ காரணம் கிடையாது. இதற்கான பெருமை, 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, நாட்டில் அமைந்துள்ள பெரும்பான்மை பலம்கொண்ட அரசையும், நாட்டு மக்களையுமே சேரும்.

16ஆவது மக்களவையில் மொத்தம் 219 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தமசோதாக்களில், கருப்புப்பண பிரச்னை, ஊழல் ஆகியவற்றுக்கு முடிவுகட்ட கொண்டு வரப்பட்ட மசோதாக்களும் அடங்கும். 16ஆவது மக்களவையில்தான், நடைமுறையில் இல்லாத 1,400 சட்டங்கள் ரத்துசெய்யப்பட்டன.

இதே மக்களவையில்தான், பினாமிசொத்துகள் மற்றும் திவால் நிறுவனங்கள் தொடர்பான மசோதாக்கள், ஜிஎஸ்டி மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் தீவிரபணிகளால்தான், உலக அளவில் இந்தியா 6ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரசக்தி என்ற நிலையை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பிக்கள், இந்த மக்களவையில்தான் உள்ளனர். பாதுகாப்புவிவகாரம் தொடர்பான கேபினெட் குழுவிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய 2 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவையின் 17 அமர்வுகளில், 8 அமர்வுகளில் 100 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. இது தவிர்த்து, மக்களவையின் ஒட்டுமொத்த செயல்பாடு 85 சதவீதமாகும்.

வங்கதேசத்துடன் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லை விவகாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம், பொதுப்பிரிவில் பொருளா தாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய முக்கிய முடிவுகளும் இதே மக்களவையில்தான் எடுக்கப்பட்டன

மக்களவையில் தம்மைபேச அனுமதித்தால், நிலநடுக்கம் நேரிடும் என சிலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மத்தியஅரசின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவடையும் தருவாயில் உள்ளது. எனினும், அவர்கள் தெரிவித்த நிலநடுக்கத்தை நாங்கள் இதுவரை காணவில்லை. மக்களவையில் சிலர் காகிதவிமானங்களை பறக்க விட முயற்சித்தனர். ஆனால் நமது நாட்டின் வலிமையான ஜனநாயகமும், மக்களவையின் கண்ணியமும், நிலநடுக்கம் நேரிடுவதையும், காகித விமானங்களையும் அனுமதிக்க வில்லை.

இதே மக்களவையில்தான் சக உறுப்பினரை ஆரத்தழுவுவதற்கும், அவர்கள் மேலே விழுவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை நான் தெரிந்துகொண்டேன். கண்களை சிமிட்டும் காட்சியையும் இங்குதான் கண்டேன்.

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை  

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...