வீரம் மிக்க படையினரின் தியாகம் ஒரு போதும் வீணாகாது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியான நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானை மிகவும் கடுமையாக தாக்கிப் பேசினார்.

‘புல்வாமா தாக்குதலில் தங்களது இன்னுயிரை நீத்த நமது வீரம் மிக்க படையினரின் தியாகம் ஒரு போதும் வீணாகாது. நமது பாதுகாப்பு படையினரின் வீரதீரத்தை நாடு பலசந்தர்ப்பங்களில் கண்டுள்ளது. அவர்களின் துணிச்சல் மற்றும் தீரத்தில் சந்தேகப்படும் ஒருவர் கூட இந்த நாட்டில் இருக்கமுடியாது.

பாகிஸ்தானின் நோக்கத்துக்கு இந்திய மக்கள் தகுந்தபதிலடி தருவார்கள். உலகின் மிகப் பெரிய நாடுகள் எல்லாம் இந்தியாவுடன் இணைந்து எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எனக்கு பலநாடுகளின் தலைவர்களிடம் இருந்து வந்துள்ள இரங்கல் செய்திகளின் மூலம் அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக வருத்தம்மட்டும் கொள்ளவில்லை. கடுமையான கோபத்திலும் உள்ளனர். பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டியே தீர வேண்டும் என்பதற்கு அவர்கள் அனைவருமே ஆதரவாக இருக்கின்றனர்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் நிச்சயமாக தண்டிக்கப் படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் உலக நாடுகளின் உதவிக்காக நாடுநாடாக ஏறி, இறங்கி வருகிறது’ என ஜான்சி மாவட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...