பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை மீட்க வேண்டும் என்று இந்திய மக்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெனிவா போர் உடன்படிக்கையின்படி போர்க் கைதியை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், துன்புறுத்தக்கூடாது என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதற்கு முன்பு பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர்களின் நிலை என்ன ஆனது என்பதுபற்றிய வரலாறைத் தேடி போது நமக்குக் கிடைத்த தகவல் இதோ..
இந்தியா – பாகிஸ்தான் இடையே 1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பில் இருந்தும் பயங்கரசண்டை மூண்டது. போரில் இந்தியா வெற்றி பெற்றாலும், மே 27ம் தேதி ஒரு துரதிருஷ்டவசமான நாளாக இருந்தது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக விமானத்தில் சென்ற விமானி நச்சிகேடா பாகிஸ்தானின் படாலிக் பகுதியில் குண்டு மழை பொழிந்துவிட்டுத் திரும்பினார்.
இரண்டாவது முறை தாக்குதல் நடத்த வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு நச்சிகேடா மிக் 27 ரக விமானத்தில் ஏறி பறந்த போது, விமானம், நிலத்தில் இருந்து வானத்தைநோக்கி ஏவப்படும் ஏவுகணையால் தாக்கப்பட்டு எஞ்ஜினில் தீப்பற்றியது. உயிர்தப்பிக்க உடனடியாக அதில் இருந்து நச்சிகேடா வெளியே குதித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்தது.
இந்த தகவல் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்திடம் தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இந்தியாவின் தொடர் நடவடிக்கைகளால் உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பாகிஸ்தானுக்குக் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி பாகிஸ்தான் நச்சிகேடாவை விடுதலை செய்ய ஒப்புக் கொண்டது. இந்த நடவடிக்கையில் செஞ்சிலுவை சங்கத்தின் பங்கும் முக்கிய அங்கம் வகித்தது. கைது செய்யப்பட்டு 8 நாட்களுக்குப் பிறகு நச்சிகேடா, செஞ்சிலுவை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு வாகா எல்லை வழியாக 1999ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இந்தியா வந்தடைந்தார்.
போர் விமானத்தில் இருந்து குதித்ததால் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு தொடர் சிகிச்சையின் பலனாக உடல் நலம் தேறிய நச்சிகேடா, அலுவலகப் பணிகளை மட்டும்செய்து வந்தார். 2003ம் ஆண்டுதான் மீண்டும் விமானியாக பணியில்சேர்ந்தார்.
தனது அனுபவம் குறித்து ஆங்கில ஊடகங்களிடம் அவர் பகிர்ந்து கொண்டதாவது, நான் பிடிபட்டபோது எனது மனநிலை எப்படி இருந்தது என்பதை வார்த்தைகளால் சொல்லமுடியாது. மிகவும் கடினமாக இருந்தது. அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க மரணம் ஒன்றே எளிய தீர்வாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும், அவர் என் பக்கம் இருந்தார். 3 அல்லது 4 நாட்கள் அங்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பத்திரமாக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஒரு விமானி பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். விங் கமாண்டர் அபிநந்தன் ராணுவ விதிகளுக்கு உட்பட்டு மரியாதையுடன் நடத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபிறகு தேநீர் அருந்துவது போன்ற புகைப் படத்தையும் பதிவிட்டுள்ளார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.