அரசியலில் எவ்வளவோ வெற்றிபெற்றாலும், போகும் போது எதையும் எடுத்துபோக போவதில்லை என்றும், பணத்தையும் புகழையும் குவிப்பதைவிட, சமூக சேவையும், பிடித்தமானவர்களோடு உறவுமுறை பேணுதலுமே மிக அவசியம் என்றும் மறைந்த கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
மறைந்த கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், மரண படுக்கையில் இருந்த போதும், அலுவலக பணிகளை தொடர்ந்து கவனித்து வந்தார். இந்நிலையில் இறுதிபடுக்கையில் இருந்த போது அவர் அளித்ததாக கூறப்படும் பேட்டி ஒன்றின் தமிழாக்கம் இணையதளங்களில் பரவி வருகிறது.
அதில் அவர், வாழ்க்கை தமக்கு அளவிடமுடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கூர்ந்து யோசித்தால் , தாம் செய்யும் பணியைவிட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , அனுபவிக்கவில்லை என்று தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலிவுற்று , படுக்கையில் வீழ்ந்தநிலையில் இதுவரை வாழ்ந்த வாழ்வினை சுயபரிசோதனை செய்து பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
புகழ், பணம்,சொத்து இவையே, வாழ்வில் அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தநிலையில், மரணத்தின் வாயிலில் நிற்கும் போது, இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிவதாக பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் படுக்கையை சுற்றி ஒளி மற்றும் ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள், மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துவதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்தசிக்கலான தருணத்தில் தாம், உணர்ந்தது என்னவென்றால் வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதைவிட, சமூக சேவையும், பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
அரசியலில் எவ்வளவோ வெற்றிபெற்று இருந்தாலும், போகும் போது எதையும் எடுத்துபோக போவதில்லை என்பதை நன்கு உணர்வதாக பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
மரணப்படுக்கையை பிறரோடு பகிர முடியாது என்பதால் அது தனித்துவமானது என சிலாகித்துள்ள பாரிக்கர், ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், இருந்தாலும் வியாதியை யாரோடும் பகிர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்து விடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது என்ற அவர், எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள் என்றும், வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள் என்றும்,
உங்கள்மீது நீங்களே அக்கறை செலுத்துங்கள், பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவுசெய்ய பழகி கொள்ளுங்கள், சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகிகொள்ளுங்கள் என்றும் பாரிக்கர் அறிவுறுத்தி உள்ளார்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.