3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3-வது கட்டபட்டியலை பாஜக நேற்று நள்ளிரவில் வெளியிட்டது. இதில் 2-வது இடமாக பூரியில் பிரதமர்மோடி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பிரதமர் மோடி 2-வதாக போட்டியிடும் இடம் குறித்த ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

3-வது கட்டமாக பாஜக சார்பில் 36 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப் பட்டனர், இதில் மகாராஷ்டிராவில் 6 வேட்பாளர்களும், ஒடிசாவில் 5 வேட்பாளர்களும், அசாம், மேகாலயாவில் ஒருவேட்பாளரும் மக்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இது தவிர்த்து ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டப் பேரவைக்கு நடைபெறும் தேர்தலுக்காக 22 சட்டப்பேரவை வேட்பாளர்களையும் பாஜக அறிவித்தது.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக சார்பில் இருக்கும் தற்போதுள்ள 6 எம்.பி க்களுக்கு மீண்டும்வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும், தற்போது பாரமதி தொகுதி எம்.பியாக இருக்கும் சுப்ரியா சுலேவுக்கு எதிராக பெண்வேட்பாளரை பாஜக நிறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக 25 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. 25 இடங்களில் 22 இடங்களுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது எம்.பியாக இருக்கும் கிரிஷ்பாபத், அனில் ஷிரோல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப் படவில்லை.

அசாம் மாநிலத்தில் மாநில அமைச்சராக இருக்கும் பாலப்லோச்சனுக்கு தேஜ்பூரில் வாய்ப்பு வழங்கப்பட்டு, அந்ததொகுதி எம்.பியாக இருக்கும் ராம் பிரசார் சர்மாவுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...