விஞ்ஞானிகளை போற்றுவோம், நாட்டின் வீரம் காப்போம்!

நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அறிவுசார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், பல்வேறு செயற்கைகோள்கள் ஏவப்படுகின்றன. அப்படி நம் நாட்டின் சார்பில் ஏவப்பட்ட செயற்கைகோள்களை திசைதிருப்பும் அல்லது தாக்கிஅழிக்கும் பிற நாட்டு செயற்கைகோள்களை நொடிப்பொழுதில் துவம்சம் செய்யும் வகையிலான அதிநவீன முயற்சி தான் மிஷன் சக்தி.

ஒடிசா அருகே வங்கக்கடலில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவுகணை ஒன்று விண்ணில் ஏவபபட்டது. அது ஏவப்பட்ட மூன்று நிமிடங்களில், விண்ணில் தாழ்வாக வட்டமிட்டுக் கொண்டிருந்த செயற்கைகோளை துல்லியமாகதாக்கி அழித்தது.

அது வேறு எந்த நாட்டுடைய செயற்கைகோளோ அல்ல. நம் விஞ்ஞானிகளால் ஏவப்பட்ட செயற்கைகோளே. எதிரிகளின் செயற்கைகோள், நம்நாட்டு ரகசியங்களை அறிவதற்காக சில சமயங்களில் நம் எல்லைக்குள் ஊடுருவி, தகவல்களை சேகரிக்கக் கூடும்.

அதை தடுக்கும்வகையில், செயற்கைகோளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சாேதனை வெற்றிகரமாக சாேதனை செய்யபட்டது. அது, இலக்கை துல்லியமாக தாக்கிஅழித்ததன் மூலம், விஞ்ஞானிகளின் சாேதனை வெற்றிபெற்றது.

இதன் மூலம், செயற்கைகோளை தாக்கி அழிக்கும் உலகநாடுகளின் பட்டியலில், அமெரிக்க, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து, இந்தியாவும் இணைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் என, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டு நலன்கருதி மிக ரகசியமாக நடத்தி முடிக்கப்பட்ட இந்த சோதனை வெற்றி அடைந்தபின், அதை, நாட்டுமக்களுடன் பகிர்ந்து கொண்டார், பிரதமர் நரேந்திர மாேடி.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அப்துல் கலாம் தலைமையில் நடத்தப்பட்ட பொக்ரான் சாேதனையை ஒத்த இந்த சாதனையை, எதிர்க்கட்சிகள் பாராட்டாவிட்டாலும், அதை பா.ஜ.,வுடன் தொர்டபு படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இந்த சாேதனையின் மூலம், நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. நம்தேசம் அமைதியை விரும்பும் தேசம். போருக்காக துடிப்பவர்கள் நாம் அல்ல. அதேசமயம், நமக்கு வரும் மிரட்டல்களையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது என்றார்.

தேர்தல் நேரத்தில், இதுபோன்ற அறிவிப்புகளை பிரதமர் மாேடி அறிவித்துள்ளது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால், புதியதிட்டத்தையோ, இனி செய்யப்போகும் திட்டத்தையோ பிரதமர் மாேடி அறிவிக்கவில்லை.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒருசோதனை, விஞ்ஞானிகளின் முழு ஒத்துழைப்பு, முயற்சியால், இன்று சாத்தியப்பட்டுள்ளது. அதை, நாட்டின் பிரதமர் என்ற அடிப்பையில், தார்மீக ரீதியான பொறுப்புடன் அவர் இதை பெருமையுடன் நாட்டுமக்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதுவும் அவரின் உரை துவங்கும் போதே, நாட்டு விஞ்ஞானிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், டிஆர்டிஓ பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து, இந்த வெற்றிக்கு அவர்கள் தான் முழுகாரணம் எனவும் கூறினார்.

அப்படியிருக்கையில், விஞ்ஞானிகளை, பிரதமர் மாேடி புறக்கணித்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் கூறுவதில் எவ்வித நியாயயும் இருக்கவில்லை என, அமைச்சர் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

அதேபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே, விஞ்ஞானிகள் இதுபோன்ற ஓர் ஆய்வை மேற்கொள்ள அனுமதி கோரியதாகவும், ஆனால், அப்போதைய காங்., அரசு அதற்கு அனுமதி அளிக்காமல், அத்திட்டதை முடக்கிய தாகவும் டிஆர்டிஓ முன்னாள் அதிகாரிகள், ஓய்வுபெற்ற விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை எந்த அரசு நிறைவேற்றினாலும், அதில் உள்ள ஆக்கப் பூர்வமான விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர, அதை அரசியல் ஆக்கி, குட்டையைகுழப்பி அதில் மீன்பிடிக்க நினைப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்பதே, நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

மாெத்தத்தில், இந்தவெற்றி விஞ்ஞானிகளின் வெற்றி. அவர்கள் எடுத்த விஸ்வரூபம். அதுவே மிஷன்சக்தி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பை ஒருபோதும் அரசியலாக்கக் கூடாது. விஞ்ஞானிகளை போற்றுவோம், நாட்டின் வீரம் காப்போம்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...