2ஜி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., இன்று நடத்திய ரெய்டு மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தை காப்பாற்றும்செயல் என , காங்கிஸ் கட்சியினால் ஏவப்படும் காங்கிரஸ் இன்வெஸ் டிகேஷன் பீரோ என சிபிஐ,யை பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது .
இதுகுறித்து பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேட்கர் தெரிவிக்கையில் : பிரமோத்மகாஜன் அமைச்சராக இருந்தபோது
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு காபினட்அமைச்சரவை எடுத்த முடிவின்படி தான் விற்கபட்டுள்ளது. எந்த கம்பெனிக்கும் கரிசணம்_காட்டவில்லை. ராஜா குற்றம்புரிய துணை புரிந்தவர் சிதம்பரம் ஆவார். எனவே ராஜாவும், சிதம்பரமும் சமஅளவில் குற்றம்புரிந்தவர்கள்.
இவர்மீது நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்களை நாங்கள்கொடுத்துள்ளோம். இவரை காப்பாற்ற கடைசி முயற்சியாக, வழககை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது . அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிபிஐ., தூண்டி விடபட்டுள்ளது. இது தரமதாழ்ந்த செயல் என் கூறினார்.
இந்தவழக்கில் ஆரம்பத்திலிருந்தே எப்படியாவது பாரதிய ஜனதா வை இழுத்துவிட்டால்,அதன்மூலம் பாரதிய ஜனதாவை கட்டுபடுத்திவிடலாம் என்ற எண்ணத்தி லேயே காங்கிரஸ் மற்றும் அவர்களின் விசாரணைகுழு விசாரணையை நடத்தி வருகிறது. இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால்தான் குப்பையை கிளறிகொண்டு இருக்கிறார்கள். பாரதிய ஜனதா ஆட்சியில் மிஸ்டர் கிளீன் என வர்ணிக்கபடும் அருண் ஷோரியை விசாரித்து அதில் ஒன்றும்கிடைக்வில்லை என்பதே இதற்க்குசாட்சி.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.