களைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்தான் –

சோனியா ஜாமீன்ல இருக்காங்க – ராகுல் ஜாமீன்ல இருக்கார் –
ராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார் – ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க –

இதேமாதிரி காங்கிரஸ் தலைவர்கள் பாதிப் பேர் ஜாமீன்லதான் இருக்காங்க -திமுக வுல –

கனிமொழி, அ.ராசா, தயாளு மேல இருக்கற 2g கேஸ் மறுபடியும் விசாரணை ஆரம்பமாயிடிச்சி –

மாறன் சகோதர்கள் எந்த நிமிஷம் வேணும்னாலும் கைதாக வாய்ப்பு –

அதாவது ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே இப்ப ஜாமீன்ல தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கு –

தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முக்கால்வாசிப்பேர் சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஜாமீனில் திரிபவர்கள் தாம் –

போதக்குறைக்கு தி.மு.க முன்னால் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு சென்ற வாரம் தான் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது –

தற்பொழுது ஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன –

இவை மட்டும் அல்ல –

இந்திய அளவில் மோடியை எதிர்ப்பவர்களில் –

லாலு பிரசாத் மாட்டுத்தீவனத்தைத் திருடித் தின்ற வழக்கில் சிறையில் இருக்கிறார் –

அவரது வாரிசுகள் அனைவர் மீது வழக்குகள் மற்றும் ஜாமீனில்தான் இருக்கின்றனர் –

மாயாவதி மீதும் பல ஊழல் வழக்குகள் –
அதில் ஒரு வழக்கில் மரியாதையாக கட்சி சின்னத்தை சிலை வைக்க செலவழித்த 1000 கோடியைத் திருப்பித் தருமாறு உத்தரவு –

மமதா பற்றிக் கேட்கவே வேண்டாம் சாரதா ஊழல் வழக்கில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறார் பீவி –

நமது சந்திரபாபு நாயுடு கலப்படபால் ஊழலில் மாட்டியதால் தான் மோடியை வசை பாட ஆரம்பித்தார் –

இப்படி ஒவ்வொரு திருடர்களும் ஒன்று சேர்ந்து மோடி என்ற மகத்தான மனிதனை எதிர்க்கிறார்கள் –

இவ்வளவு வழக்குகளிலும் ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு –

60 வருட காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகளின் லட்சணம் இது-

சிறு உதாரணம் –

ப.சி குடும்பத்தைக் கைது செய்ய விடாமல் 18 முறை ஜாமீன் வழங்கியது –

பண மதிப்பிழப்பு கொண்டு வந்தால் வங்கி அதிகாரிகளே பணத்தை மாற்றிக் கொடுத்தது –

இது போன்று அடிமட்டத்திலிருந்து ஊழல் –

இவற்றையெல்லாம் ஐந்து வருடத்தில் நிச்சயமாக கடவுளால் கூட சரி செய்ய முடியாது –

அதற்குத் தேவையான இராஜ்யசபை பெரும்பான்மையும் மோடியிடம் இல்லை –

எனவே தான் பல முக்கிய சீர்திருத்தச் சட்டங்களை அவசரச் சட்டங்களாக மட்டுமே கொண்டு வர வேண்டிய நிலை –

களைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்தான் –

ஆனால், இங்கே களைகளையே பயிர்களாக நம்பும் ஒரு கூட்டம் –

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் அதிகம் –

கட்சி சார்ந்தவர்களை விட்டு விடுங்கள் –

நடுநிலையானவர்களே வாக்களிக்கும் முன் ஒரே ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள் –

தேசப்பணியில் என்றும் –
செந்தில்குமார் டி ஆர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...