வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவலுக்கு முந்தைய காங்கிரஸ் அரசும், அதன் கொள்கைகளுமே காரணம், ஊடுருவல் காரர்களை மத பாகுபாடின்றி வெளியேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசு, வடகிழக்கு மாநிலங்களுக்கு எவ்வாறு துரோகம் இழைத்தது என்பதை இன்றைய இளைஞர்கள் தங்களுடைய மூத்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். தேசத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படுவோரை மக்கள் ஆதரிப்பீர்களா?
காங்கிரஸ் எப்போதுமே மக்களை ஏமாற்றுகிறது. 1970-களில் காங்கிரஸ் கொண்டு வந்த மோசமான கொள்கைகளின் காரணமாகவே வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவல்கள் ஏற்பட்டன. இதனால் அந்தமாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன.
வங்கதேச விடுதலை இயக்கத்தின்போது ஜனசங்கமும் (அப்போதைய பாஜக), வாஜ்பாய் போன்ற தலைவர்களுமே வங்கதேசத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
அஸ்ஸாம் மக்களின் கலாசாரம் மற்றும் நலன்களை பாதுகாக்க முயற்சிமேற்கொண்டு வருகிறோம். மாநிலத்தில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை மத பாகுபாடின்றி வெளியேற்ற உறுதி பூண்டுள்ளோம். தாய் அஹோம், முட்டோக், மோரான், சுடியா, கோச் ராஜ்போங்கிஸ், தேயிலை தோட்டபணியாளர்கள் ஆகிய 6 சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்துவழங்க பரிசீலித்து வருகிறோம்.
மக்கள் அளிக்கும் ஆதரவின் மூலம், ஏழைகள் மற்றும் பழங்குடியினருக்காக உழைக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர அனைவருமே பாஜக அரசில் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அஸ்ஸாமில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வீட்டுவசதி அளித்துள்ளோம். 27 லட்சம் குடும்பங்கள் தலா ரூ.5 லட்சத்துக்கான சுகாதார காப்பீடு பெற்றுள்ளன.
அருணாசல பிரதேசமானது, நாட்டின் எல்லையை ஒருகேடயம் போல பாதுகாக்கிறது. அந்தமாநில மக்கள் ஒரு பாதுகாவலனைப் போல இருக்கின்றனர்.
நமது நாடு ஏதேனும் சாதனைகள் புரியும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். எந்தஒன்றில் வெற்றி காணும்போதும் சமூக, பொருளாதார வேறுபாடுகள் இன்றி அனைவரும் அதைக் கொண்டாடுகிறோம். ஆனால் சிலர் (எதிர்க்கட்சிகள்), இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வெற்றியைக்கண்டு மன வருத்தமடைகின்றனர்.
பயங்கரவாதிகளை, அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று நாம்தாக்கியபோது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை நாம் அறிவோம். நமது விஞ்ஞானிகள் செய்யும் சாதனையைக்கூட அவர்கள் சிறுமைப்படுத்தி பேசுகின்றனர். அத்தகைய எதிர்க்கட்சிகளுக்கு வரும்தேர்தலில் மக்கள் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களில் முதலில் அருணாசல பிரதேசத்தில்தான் பாஜக ஆட்சிமலர்ந்தது. உங்களது ஆதரவால்தான் மத்திய அரசால் அருணாசல பிரதேசத்தில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் 50,000 குடும்பங்களுக்கு மின் இணைப்பும், 40,000 வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பும் வழங்கியுள்ளோம். அத்துடன் ஒருலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகான இந்த 70 ஆண்டுகளில் அருணாசல பிரதேசத்தில் ரயில்வே வழித்தடத்தை ஏற்படுத்தும்வாய்ப்பு காவலனாகிய எனக்கு கிடைத்தது.
சமீபத்தில் கொண்டுவரப்பட்ட “அருண் பிரபா’ சேனல் மூலம் இந்த நாடே அருணாசல பிரதேசமக்கள், அவர்களின் கலாசாரம், பண்டிகைகள் குறித்து அறிந்துகொள்ளும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சியில், மாநிலத்தில் விமானப் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளும் தீவிரமடைந்துள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக நிதியளித்து, அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுமார் 30 முறை வருகைதந்திருப்பேன். இதற்கு முன்பாக எந்தவொரு பிரதமரும் இத்தனை முறை இங்கு வந்திருக்க மாட்டார்கள்.
இங்கு வரும்போதெல்லாம் பழங்குடியினரின் தலைப்பாகை மற்றும் உடைகளை விரும்பி அணிகிறேன். பலர் அதை ஏளனம் செய்கின்றனர். மற்றவர்களுக்கு இது வெறும் பழங்குடியினர் உடை மட்டும்தான். ஆனால், என்னைப் பொருத்தவரை இந்த உடை வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிப் பவையாகும். அவற்றை அணிவதற்காக பெருமிதம் கொள்கிறேன்.
அஸ்ஸாம் அருணாசல் மாநிலங்களில் சனிக்கிழமை சனிக்கிழமை நடைபெற்ற பாஜகவின் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியது
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.