”காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு வடகிழக்கு மாநிலங்களை அதன் மக்கள் தொகை மற்றும் எம்.பி., சீட்டுக்களின் எண்ணிக்கையை வைத்து குறைத்து எடை போட்டது,” என பிரதமர் மோடி கூறினார்.
டில்லி பாரத் மண்டபத்தில் எட்டு வடகிழக்கு மாநிலங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும், ‘அஷ்டலட்சுமி மகா உத்சவ்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் பேசியதாவது:
பா.ஜ., ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுஉள்ளது. கடந்த 10 ஆண்டு களில் மத்திய அமைச்சர்கள், 700 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்துஉள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்தது. அவர்கள் காலங்காலமாக, வளர்ச்சி என்பதை ஓட்டுக்களின் எண்ணிக்கையுடன் எடை போட்டனர். வடகிழக்கு மாநிலங்களில் குறைவான ஓட்டுகள், குறைவான சீட்டுகள் இருந்தன. இதனால், அவர்கள் வட கிழக்கு மாநிலங்களை குறைத்து எடை போட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களின் துடிப்பான கலாசாரமும், ஆற்றல் மிக்க மக்களும், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் வடகிழக்கு மாநில நகரங்களான குவஹாத்தி, அகர்தலா, இம்பால் மற்றும் இடாநகர் போன்றவை வளர்ச்சியின் சின்னங்களாக உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |