பொன். ராதாகிருஷ்ணன் பிபிசி.,க்கு அளித்த பேட்டி

மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான பேட்டியிலிருந்து சிலபகுதிகளை தொகுத்து அளிக்கிறோம்.

கேள்வி: தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வெற்றிவாய்ப்புகள் எப்படி உள்ளது?

பதில்: நிச்சயமாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அகில இந்திய அளவில் கடந்த முறையை விட இந்தமுறை அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

கேள்வி: 2013 ஆம் ஆண்டு பா.ஜ.கவால் நடத்தப்பட்ட கடல் தாமரை மாநாட்டில் வரும் ஐந்து ஆண்டிற்குள் கச்சத்தீவை மீட்டு எடுப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கடந்த ஐந்து ஆண்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

பதில்: தமிழக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்தால், இலங்கையில் வசிக்கும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லை கொடுத்தால் நாங்கள் அதை திரும்பப்பெற வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம் என்று கூறினோம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் படுகொலைகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அங்கு இருக்கக் கூடிய மக்கள் தங்கள் தொழில்களை செய்யக்கூடிய சூழ்நிலை அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்காக 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான படகுகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் ஒரு ஆண்டிற்குள் நிரந்தர தீர்வுகிடைக்கும்.

கேள்வி:சென்னையில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அடிப்படையில் கன்னியாகுமரியில் தொழிற்சாலை வர வாய்ப்பு உள்ளதா?

பதில்: இது ஒருசிறிய மாவட்டம், இயற்கை வளம் நிறைந்த மாவட்டம், தொழில் தொடங்ககூடிய அளவுக்கு இடம் கிடையாது. எனவே, அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் உள்ள ராதாபுரம், நாங்குநேரி ஆகிய தாலுகாக்களில் தொழில்தொடங்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

கேள்வி: நீங்கள் போட்டியிடும் கன்னியாகுமரியில் பாஜகவுக்கு கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் ஆதரவளிக்க என்ன செய்யப்போகிறீர்கள்?

பதில்: கடந்த 37 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பகைமை உணர்வுடன்கூடிய அரசியலை நடத்தி வருகின்றனர். இந்துக்களும், கிறித்தவர்களும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது, கிறித்தவரும் இஸ்லாமியரும் ஒன்று சேர்ந்து விடகூடாது என பகைமை அரசியல் நடத்தி ஆதாயம் தேடிவருகின்றனர். இப்படி வெற்றிபெற்று வரக் கூடிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இவர்களால் அவர்களுக்கு ஆபத்து, அவர்களால் இவர்களுக்கு ஆபத்து என மக்களுக்கு அச்சதை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர்.

இயற்கை அழிந்துபோகும் என்ற புரளியை கிளப்பிவிட்டு இந்த மாவட்டத்து மக்களை மதரீதியான சிந்தனைகளுடன் அடிமைபடுத்தி வைக்க வேண்டும் என்ற சிந்தனையில் பலர்செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் இதற்கு விடிவுகாலம் கிடைக்க வேண்டி இந்த தேர்தலில் முன்னெடுத்து செல்கிறோம்.

கேள்வி: தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல்பாலம் அமைக்கப்படுமா?

பதில்: நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதிபாடிய விஷயம் ‘சிங்களத் தீவிற்க்கு பாலம் அமைப்போம்’ அதனை மக்களும் விரும்புகின்றனர். அந்தநாட்டு அரசாங்கமும் நினைத்தால் நிச்சயம் நடக்கும். இந்தவிஷயத்தில் இரண்டு கையும் சேர்ந்தால்தான் ஓசை வரும். ஆனால், கடல்பாலம் அமைக்கப்பட்டால் இந்திய இலங்கை ஒற்றுமை மிகவும் வலுவடையும்.

கேள்வி: பொன்.ராதா கிருஷ்ணன் எத்தனை ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்?

பதில்: ஏன் ஆயிரத்தை சொல்கிறீர்கள். குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று களத்தில் உள்ள எனது சகோதரர்கள், கூட்டணிகட்சி சகோதரர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...