நீட் முறைக்கேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதி படுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

“நீட் முறைகேடுகளைத்தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதிப்படுத்தவேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

நீட் முறைகேடு மற்றும் நெட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ராதாகிருஷ்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எம். சண்முகம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் வகையிலும் இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு கடந்த அக். 21-இல் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

பாதுகாப்பான தேர்வை உறுதிப்படுத்த மாநிலங்கள், மாவட்ட அரசு நிர்வாகத்துடன் வலுவான தொடர்பை மேம்படுத்த வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதி மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களை அமைத்து என்டிஏ தேர்வுகள் வெளிப்படையாக நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல, “நீட், யுஜிசி நெட் தேர்வுகள் மிக மோசமாக கையாளப்பட்டது தொடர்பாக துறை அளவிலான மறுஆய்வை மேற்கொண்டதா’ என்று மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், “கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவுட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பரவலாக முறைகேடுகள் நடைபெறவில்லை, தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல ...

இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் – பிரதமர் மோடி வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் ...

துளசி கவுடாவின் மறைவுக்கு பிரத ...

துளசி கவுடாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது ...

2025-ல் தேசிய தேர்வு முகமை முற்றில ...

2025-ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும் – தர்மேந்திர பிரதான் 2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும். உயர்கல்வி ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கலாம் – அமித் ஷா 'ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; பார்லி., கூட்டுக்குழு ...

நேரு எழுதிய கடிதங்களை கொடுங்கள ...

நேரு எழுதிய கடிதங்களை கொடுங்கள் -ராகுலுக்கு மத்திய அரசு கோரிக்கை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், எட்வினா மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோருக்கு முன்னாள் பிரதமர் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் லோக் சபாவி ...

ஒரே நாடு ஒரே தேர்தல் லோக் சபாவில் இன்று தாக்கல் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான மசோதாவை மத்திய ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.