வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி. 45 ரக ராக்கெட் …

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி. 45 ரக ராக்கெட் …28 செயற்கைகோளுடன் அது பறந்திருக்கின்றது …

இதில்தான் இந்தியாவின் மாயக்கண்ணான அந்த எமிசாட்டும் இருக்கின்றது …

இந்த எமிசாட்டுக்காகத்தான் அந்த A-SAT செயற்கைகோள் ஏவுகணையினை இந்தியா சோதித்தது …

மிக உயரத்தில் அதை நிலைநிறுத்தும்பொருட்டு இந்திய ராக்கெட் சென்று கொண்டிருக்கின்றது …

விரைவில் நிலை நிறுத்தும் …

28 செயற்கை கோளை சுமந்து செல்வது சாதாரண விஷயமல்ல …

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு கிரையோஜனிக் நுட்பத்தை தரக்கூடாது என தடுத்த அமெரிக்காவின் செயற்கை கோளையும் இந்திய ராக்கெட் சுமந்து செல்கின்றது …

அவ்வகையில் மாபெரும் வெற்றி இது

மாபெரும் சாதனையினை தேசம் செய்திருக்கின்றது அதற்கு பாடுபட்ட விஞ்ஞானிகளை தேசம் வாழ்த்தி வணங்குகின்றது

இந்த செய்தியில் தலைமை விஞ்ஞானி சொல்லியிருக்கும் விஷயங்களை கவனியுங்கள் …

இந்திய ராணுவத்திற்காக‌
436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது …

இது 753 கி.மீ உயரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது …

இது தவிர லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான 24 செயற்கைக்கோள்கள் உட்பட 28 செயற்கைக்கோள்களும் சுமார் 505 கி.மீ உயரத்தில் விண்வெளியில் நிலை நிறுத்தப்படுகிறது.

28 செயற்கைக்கோள்களும் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த உடன், ராக்கெட்டின் 4-வது நிலை எமிசாட்டுக்காக வேறுபட்ட உயரத்திற்கு இயக்கப்படுகிறது …

கவனித்தீர்களா … ?

இந்த எமிசாட்தான் இப்பொழுது துருப்பு சீட்டு 753 கிமீ உயரத்தில் அதை நிறுத்த போகின்றார்கள் …
பல்வேறு வகையான உளவு தகவல்களை அது அனுப்பும் …

இதனை நிச்சயம் உடைக்க எதிரி நாடுகள் விரும்பும் …
அப்படி ஒரு கோள் இயங்க அவை விடாது …

இதனால்தான் எங்களிடமும் சாட்டிலைட்டை நொறுக்கும் ஏவுகணை உண்டு என நிரூபித்து காட்டிவிட்டு எமிசாட்டினை இன்று 1-ஆம் தேதி அனுப்பியது இந்தியா …

எமிசாட் உள்நாட்டு தயாரிப்பு என்றாலும் அதன் நவீன பாகங்கள் நம் தயாரிப்பு அல்ல‌ …

பல வெளிநாடுகளிலிருந்து பெற்ற நுட்பம் மூலம் அட்டகாசமான நவீன கோளை செய்துவிட்டோம் …

இவை எப்படி கிடைத்தன?

சொன்னால் திட்டுவீர்கள் …
ஆனால் அதுதான் உண்மை … #மோடியின் திருத்தபட்ட வெளியுறவு கொள்கையால் சில சக்திகளிடமிருந்து பெறப்பட்ட விஷயம் இது …

சுதந்திர காலத்திற்கு பிறகு இப்போது நாட்டுக்கு எது தேவையோ அதை பெற்றுவிட்டோம் …

ஏப்ரல் 1-ல் எமிசாட் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டபின் அதற்கான பாதுகாப்பினை தற்போது சோதிக்கபட்ட ஏவுகணை A-SAT வழங்கும்

தேசம் பெரும் மைல் கல்லினை எட்டியிருக்கின்றது …

ஜெய்ஹிந்த் !

~ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...