75 வயதுக்கும் அதிகமானோருக்கு பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவேண்டாம் என முடிவு செய்யப்பட்டது என்று கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
கட்சியின் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். இந்தவிவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி வருகின்றன. 75 வயதுக்கு அதிகமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம் என்று கட்சி முடிவு செய்தது.
கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தேன். மக்களுடன் வாழும் ஓர் அரசியல்வாதி நான். என்னுடைய எம்எல்ஏ பதவிக்காலம் நிறைவடைந்த போது மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை. அதனால், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டேன். நான் நாடாளுமன்றத்துக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதை கட்சியும் ஏற்றுக்கொண்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கையை பிரதமர் மோடி கடைப்பிடித்து வருகிறார். அந்தக்கொள்கையும் வெற்றிபெற்றது. துல்லியத் தாக்குதல், வான்வழித் தாக்குதல் என பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.
பாலாகோட்டில் நிகழ்த்தப்பட்ட வான் வழித் தாக்குதலில் பாகிஸ்தான் இழப்புகளை எதிர்கொண்டது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும், ராணுவமும் ஒப்புக்கொண்டன .
ராமர் கோயில் விவகாரம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்பின் 370வது பிரிவு ஆகிய விவகாரங்கள் குறித்து தீர்வு காண மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை வேண்டும் .என்றார் அமித் ஷா
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.