பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்; கருத்துக் கணிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ், இண்டியா டிவி, நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்க பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி இண்டியா டிவி, சிஎன்எக்ஸ் நிறுவனம் இணைந்து நாடு முழுவதும் 543 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதன்முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 295 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 127, இதர கட்சிகளுக்கு 121 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டியா டிவி, சி.என்.எஸ் கருத்து  கணிப்பில் முக்கிய மாநிலங்களின் முடிவுகள் விவரம்:

உத்தர பிரதேசத்தில் பாஜக 46, பகுஜன் சமாஜ்-சமாஜ் வாதி கூட்டணி- 29, காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளை கைப்பற்றும்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 29, பாஜக 12, காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றிபெறும்.

மத்திய பிரதேசத்தில் பாஜக 23, காங்கிரஸ் 6, ராஜஸ்தானில் பாஜக 19, காங்கிரஸ் 6, சத்தீஸ்கரில் பாஜக 5, காங்கிரஸ்6, பிஹாரில் பாஜக-ஐக்கிய ஐனதாதள கூட்டணி- 31, ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி 7, மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 36, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 12, குஜராத்தில் பாஜக 24, காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 33, அதிமுக-பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 20, தெலுங்கு தேசம் 5, தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரியசமிதி 14,காங்கிரஸ் 2, கர்நாடகாவில் பாஜக 16, காங்கிரஸ் 10, மதச்சார்பற்ற ஜனதா தளம் 2,

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 16, இடதுசாரி கூட்டணி 4 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் கணிப்பு

டைம்ஸ் நவ், விஎம்ஆர் நிறுவனம் இணைந்து கடந்த மார்ச் 22 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நாடு முழுவதும் கருத்துக் கணிப்பை நடத்தி நேற்று முடிவுகளை வெளியிட்டன. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 279 , காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 149, இதர கட்சிகளுக்கு 115 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜக 50, பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி 27, காங்கிரஸ் 3 தொகுதிகளைக் கைப்பற்றும்.

மத்திய பிரதேசத்தில் பாஜக 20, காங்கிரஸ் 9, ராஜஸ்தானில் பாஜக 18, காங்கிரஸ் 7, குஜராத்தில் பாஜக 22, காங்கிரஸ் 4, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38, காங்கிரஸ் கூட்டணி 10, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் -20, தெலுங்கு தேசம் 5, கர்நாடகாவில் பாஜக கூட்டணி 16, காங்கிரஸ் கூட்டணி 12, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 17, இடதுசாரி கூட்டணி 2, பாஜக கூட்டணி1, தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 33, அதிமுக-பாஜக கூட்டணி 6 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் நேஷன் கணிப்பு

நியூஸ்நேஷன் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 278, காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்திருப் பதாகவும் நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக எளிதாக ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...