அதிமுகவை அழிக்கப்பார்க்கிறார் ஸ்டாலின் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.சதன் பிரபாகர் ஆகியோரை ஆதரித்து, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரமக்குடியில் பிரச்சாரம்செய்தார். அதனையடுத்து ராமநாதபுரம் அரண்மனை முன் நயினார் நாகேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: 2009-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு இருந்தபோது இலங்கையில் போர் நடந்தது. அந்தப்போரில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் இளைஞர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்றனர். இதைத்தடுக்காமல் வேடிக்கை பார்த்தது காங்கிரஸ், திமுக.
போரை நிறுத்தக்கோரி அப்போதைய முதல்வர் கருணா நிதி உண்ணாவிரதம் இருந்து நாடகமாடினார். 3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு, போர் முடிவடைந்துவி ட்டதாகத் தெரிவித்தார். ஆனால் போர்தொடர்ந்து நடைபெற்றதால், பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களை மிரட்டி சொத்துகளை எழுதிவாங்குவது, பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் கடைக்காரரை அடிப்பது என ஈவு இரக்கமில்லாமல் நடப்பதுதான் திமுகவினரின் வேலை. பொங்கல்பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1,000 வழங்கினோம். அடுத்ததாக 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் அறிவித்தோம். திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதை வழங்கவிடாமல் தடுத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கினார். மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சி ஏற்பட மோடி பிரதமராக தொடர வேண்டும் என்றார்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.