பாஜக தேர்தல் அறிக்கை தொலைநோக்கம் நிறைந்தது

பாஜக தேர்தல் அறிக்கை பல புதிய அம்சங்கள் அறிவிப்புடன் வெளிவந்துள்ளது . முதலில் அதை ‘தேர்தல் அறிக்கை’ என்று கூறாமல், ‘சங்கல்ப் பத்ரா’ (உறுதிமொழி பத்திரம்) அல்லது ‘தீர்மான ஆவணம்’ என்று கூறலாம் . இதன் சிறப்புகள் குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவாக எடுத்துரைத்தார்.

தேர்தல் அறிக்கை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கானது. அது போல்தான் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடும். ஆனால், பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள பெரும் பாலான உறுதி மொழிகள் 2022-ம் ஆண்டு வரைக்கானது. அந்த ஆண்டுதான் இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. 2019-க்குப் பிறகு அடுத்த மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டுதான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாஜக.வின் தேர்தல் அறிக்கையில், 75-வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு 75 இலக்குகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையை இணைத்து பிரதமர் நரேந்திரமோடி 130 கோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி பார்த்தால் பாஜக.வின் அறிக்கை 2047-வது ஆண்டு வரை நீள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவை கொண்டாடப்படும் வரை பாஜக அறிக்கை உள்ளது.

மோடி கூறும்போது, ‘‘வரும் 2047-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டை நிறைவுசெய்கிறது. அப்போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் இணைந்து கற்பனை செய்வோம். 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக அடுத்த 5 ஆண்டுகளை மாற்றி அமைக்க பாஜக உறுதிபூண்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

தவிர புதிதாக பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

வழக்கமாக பாஜக.வின் ஒவ்வொரு அறிக்கையிலும் ராமர் கோயில் கட்டுவோம் என்பது இடம்பெறும். தற்போது சபரிமலை விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சபரிமலை தொடர்பான மக்களின் நம்பிக்கை, பாரம்பரியம், வழிபாட்டு சடங்குகளை உறுதிசெய்வதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை மற்றும் சொத்துகள் வாங்க கட்டுப்பாடு விதிக்கும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வது, 60 வயதான சிறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, மீனவர்களுக்குத் தனித்துறை உருவாக்குதல், 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம், தண்ணீர் மேலாண்மைக்கு தனிஅமைச்சகம், பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க நதிகள் இணைப்பு, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரத்தில் 3-வது பெரியநாடாக இந்தியாவை உருவாக்குவது, வறுமை கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் சதவீதத்தை ஒற்றை இலக்கத்துக்குள் குறைப்பது என அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படும் என்று  கூறப்பட்டுள்ளன.

மேலும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி, 2022-ம் ஆண்டுக்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, கங்கை நதியை முழுவதுமாக தூய்மைப்படுத்துவது, 2024-ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் மின்மய மாக்குவது, 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பது, 100 புதிய விமான நிலையங்கள், 400 அதி நவீன ரயில் நிலையங்கள் உருவாக்குதல், உள்கட்டமைப்புக்கு 100 லட்சம் கோடி முதலீடுசெய்வது உட்பட பல புதியவாக்குறுதிகளை பாஜக வழங்கி உள்ளது.

மேலும், வெளியுறவுத்துறை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக இந்தப் பிராந்தியத்திலேயே முதல் முறையாக ‘வெளியுறவு கொள்கை பல்கலைக் கழகம்’ தொடங்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...