வறுமை ஒழிக்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை ஜவாஹர்லால்நேரு காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக கூறிவருகின்றனர் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை வேரறுப்பதன் மூலமாக நாட்டை பாதுகாப்பானதாக வைத்திருக்கவும், விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தவும், ஏழ்மைக்கு முடிவுகட்டவும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார்.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிதின்கட்கரி பேசியதாவது:
நாடுவிடுதலை அடைந்ததில் இருந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ்தான் ஆட்சி செய்திருக்கிறது. ஜவாஹர்லால் நேரு தொடங்கி அக்கட்சியில் 4 தலைமுறைகளாக இருந்த தலைவர்கள் வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதிஅளித்தனர். ஆனால், அவையெல்லாம் பொய்யாகின.
நேருவுக்குப்பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமரானார். வறுமை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதிகொடுத்த அவர் 20 அம்ச திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை .
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.