இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு ஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்டிருக்கின்றது , அதை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்
இலங்கை பாதுகாப்பு அமைச்சு இதுஉள்ளூர் தவுபிக் ஜமாத் அமைப்பின் தாக்குதல் ஆனால் வெளிநாட்டு தொடர்பு இருக்கலாம் என சொல்ல, அமைச்சரவையோ முழுக்கமுழுக்க உள்நாட்டுசதி என முடித்திருந்தது
ஆனால் உலகம்முழுக்க இருந்து கண்டனம் குவிந்தது, இதுசாதாரண தாக்குதலா? இதற்கான நிதியும் தொழில்நுட்பமும் பயிற்சியும் எங்கிருந்துவந்தது? இது ஆசியாவுக்கான மிரட்டல் என எச்சரிக்க தொடங்க இலங்கைக்கு நெருக்கடி உண்டாயிற்று
ஆம் அது ஓலைபட்டாசோ நாட்டு வெடிகுண்டு சமாச்சாரமோ அல்ல , மிகபெரும் அறிவும் அழிவு சிந்தனையும் கொண்ட மாபெரும் இயக்கத்து உதவியின்றி அது சாத்தியமில்லை
கடந்த ஒருவருடமாக இலங்கையில் மீட்கபட்ட ஆயுதங்களும் வெடிபொருளும் மர்மநபரின் நடமாட்டமும் பலத்த சந்தேகத்திற்குரிவை
ஆனால் இலங்கை அதை கட்டுபடுத்தவில்லையே ஏன்?
உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்றால் விஷயம் அதிர்ச்சியானது, மேற்கொண்டு மனதை திடபடுத்திவிட்டு படியுங்கள்
என்னதான் நட்பு நாடு என்றாலும் இலங்கையில் தீவிரவாதத்தை வளர்துவிட்டு நாசமாக்கியது இந்தியா, அதுவும் ராஜிவ் கொலைக்கு பின்பும் புலிகளை ஒழிக்க இந்தியா தயங்கியது என அதன்மேல் ஏகபட்ட கோபம் கொண்ட நாடு இலங்கை
அதாவது இந்தியா பேட்ட ரஜினி என்றால் இலங்கை அந்த சிங்காரம், அடங்கி போகும் ஆனால் உள்ளே வன்மம் அதிகம்
அப்படிபட்ட இலங்கையில் இந்திய எதிரி நாடொன்று கால்பதித்து தீவிரவாதத்தை வளர்த்து இந்தியாவுக்கு எதிரான காரியங்களைசெய்ய முயன்றிருக்கின்றது
இதை இலங்கையும் ரசித்திருக்கின்றது, அதாவது இலங்கையில் பயிற்ச்சிபெற்று தமிழகம் உட்பட தென் கடற்கரையினை தாக்குவது அவர்கள் திட்டம் என்கின்றார்கள்
குமரி தூத்துகுடி கேரளம் கூடங்குளம் புதுச்சேரி வேளாங்கண்ணி சென்னை என அவர்கள் வந்து அழிக்கும் திட்டம் இருந்திருக்கலாம், மும்பைபாணி அது
நிச்சயம் இந்தியாவுக்கு எதிராக பாய்வார்கள் , நம்மை கெடுத்த இந்தியா தீவிரவாத வலியினை உணரட்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கலாம்
அதனால்தான் 30 வருட தீவிரவாத அழிவுவலி இருந்தும் சவால் எடுத்திருக்கின்றார்கள்
இந்நிலையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த அவர்களால் முடியவில்லை.இதில் ஒருவிஷயம் சொல்லியாக வேண்டும், மோடி அரசின் பலத்த நடவடிக்கையும் என்.ஜி.ஓ பணங்களை நிறுத்தி வைத்ததும் இங்கு அவர்கள் திட்டத்தை செயல்படுத்த முடியவிவ்ல்லை
இந்திய உள்நாட்டு பாதுகாப்பும் வழக்கமான தென்னக நிலையும் அவர்கள் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்தன.
கூடுதலாக விஷயத்தை மோப்பம்பிடித்த இந்தியா ராஜபக்சேவினை பிரதமராக்குதல் சிறிசேனாவுக்கு செக்வைத்தல் என பிடியினை இறுக்கியது
இந்தியாமேல் தாக்குதல் நடத்தமுடியாது என தீவிரவாத மேலிடம் தெரிந்தாலும் வெறி ஏற்றபட்ட உள்ளூர் இம்சைகளை கட்டுபடுத்த முடிய வில்லை
அஸ்வத்தாமன் அறிவுகெட்டு பிரம்மாஸ்திரம் வீசியது போல வீசிவிட்டார்கள்
இவர்களை இன்னொரு சக்தி தூண்டி விட்டது என்ற கோணமும் உண்டு. விஷயம் வெளிதெரிந்தால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து இலங்கை ஆப்கன் போல பாதுகாப்பற்ற நாடு, தீவிரவாதிகளின் சொர்க்கம் என்றெல்லாம் அஞ்சிய இலங்கை விஷயம் உள்நாட்டு சரக்கு என முணகிகொண்டே முடிக்க பார்த்தது
ஆனால் ஒரு மனிதர் காட்சிக்குள் வந்தார் அவர் பெயர் டிரம்ப்
மிக பெரும் உளவு சக்தியான அமெரிக்கா எச்சரித்தபடியே நேற்றும் குண்டுவெடிக்க டிரம்ப் சடுதியாக பேசிவிட்டார்
அல்லது மிரட்டிவிட்டார், “ஒழுங்காக விசாரிக்க போகின்றீர்களா? இல்லை விவகாரத்தை நாங்கள் சந்திக்கு இழுக்கட்டுமா?” என்ற ரீதியில் அவர் பேசிவிட ஆடிபோய்விட்டது இலங்கை
அதன்பின் இன்டர்போல் விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கின்றது
இனி என்னாகும்? அமெரிக்க தலையீடு இருக்கும்
இப்பொழுது ஒரு கேள்வி எழலாம் , இதுவரை நடந்ததெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாதா?
சத்தியமாக எல்லாம் தெரியும், இனி தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு விசாரணை வசனம் எழுதுவார்கள்
ஆனால் கண்துடைப்பு தீர்ப்பாக இருக்குமே அன்றி திரைமறைவில் எது அமெரிக்காவுக்கு தேவையோ அதை செய்து கொடுப்பார்கள்
எவனோ அல்லக்கை ஒருவன் தண்டிக்கபடுவான் மற்றபடி முழு விஷயமும் வெளிவராது
உலக அரசியல் என்பது இதுதான்
மொத்தத்தில் இலங்கையில் இந்தியாவுக்கு எதிராக ஏதோ செய்ய முடிவெடுத்து இந்திய அரசின் பலமான நடவடிக்கையால் இங்கு வரமுடியாமல் அப்படியே கொழும்பு இந்திய தூதரகத்தை குறி வைத்தும் முடியாமல் எங்கோ சாடிவிட்டார்கள்
நிச்சயமாக சொல்லலாம் அந்நிய தொண்டுநிறுவண நிதி முடக்கபட்டதில் பல ஆபத்து நீங்கியிருக்கின்றது, அவ்வகையில் மோடி அரசின் நடவடிக்கை சரியே
பாதுகாப்பு சட்டங்கள் திருத்தபட்டதும் சரியே
இந்திரா காலத்துக்கு பின் இந்தியா இலங்கையின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுகின்றது
இந்த நடவடிக்கையாலே தென்னகம் இப்பொழுது கனத்த அமைதி, ஆனால் நாமோ மோடிக்கு கருப்புகொடி கோபேக் என சொல்லி நன்றி மறக்கின்றோம்
இலங்கையில் மோடி அரசின் அணுமுறை துல்லியமாக பலித்திருக்கின்றது, இந்தியாவுக்கு பாதுகாப்பு கிட்டியிருக்கின்றது
இனியாவது தமிழகம் சிந்தித்தல்வேண்டும், மாபெரும் ஆபத்தில் இருந்து தப்பி இருக்கின்றோம்
ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் உண்மைகளை சொல்லிவிட வேண்டும் என்பதால் சொல்லிவிட்டோம்
இவ்விஷயத்தில் இனிவரும் அரசு மோடி வழியிலேதான் செல்ல வேண்டும்
மாறாக ராகுல் சொல்வது போல பாதுகாப்பு சட்டங்களை தளர்த்தலாம் எனும் பேச்சுக்கே இடமில்லை, அந்நிய தொண்டு நிறுவண நிதி வரத்தையும் முடக்கி வைப்பதே நல்லது
மிக உறுதியாக சொல்லலாம், ரா மிக சிறப்பாக இலங்கையில் கடமையாற்றி தேசத்திற்கு நல்ல பாதுகாப்பினை வழங்கி இருக்கின்றது
முகம் தெரியா அந்த தெய்வங்களுக்கு நன்றி கலந்த கண்ணீருடன் வணக்கங்கள்
இந்திய தேசம், குறிப்பாக தென்னகம் உங்களை வணங்குகின்றது, அப்படியே மோடிக்கும் ஒரு சல்யூட்…
நன்றி Stanley Rajan
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.