இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டரில் கொல்லபட்டார் என்று சிறப்பு புலனாய்வு குழு குஜரா உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ள நிலையில், மத்திய உளவுதுறையினர் அளித்த தகவல்கள் இஷ்ரத்துக்கு எதிராகவே இருந்தது என முன்னாள் உள்துறை அமைச்சர் ஜிகே.பிள்ளை கூறியுள்ளார் .
இஷ்ரத்தும், வேறுசிலரும் சந்தேகதுக்குரிய செயல்பாடுகளில் சம்பந்தபட்டிருந்தனர் என
மத்திய புலனாய்வுதுறை ஐபி.,யின் தகவல்கள் குறிப்பிட்டது என சிஎன்என்-ஐபிஎன் தொலைகாட்சியிடம் ஜிகே.பிள்ளை தெரிவித்துள்ளார் .
இஷ்ரத் போலிஎன்கவுன்ட்டரில் சுட்டுகொல்லப்பட்டார் என மட்டுமே சிறப்பு புலனாய்வுகுழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அவர் பயங்கரவாதியா இல்லையா என சிறப்புபுலனாய்வு குழு கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2004ம் ஆண்டு போலீஸாரால் சுட்டுகொல்லப்பட்ட இளம்பெண் இஷ்ரத் ஜெஹான் , இவர் லஷ்கர் இ தொய்பாவால் தீவிரவாத பணிக்கு தேர்ந்தெடுக்கபட்டவர் என அமெரிக்காவில் கைதான தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியதாக செய்திகள் ஏற்க்கனவே வெளியாகியுள்ளது .
இந்திய விசாரணைகுழுவிடம் இஷ்ரத் ஜெஹான் பற்றி ஹெட்லி பலதகவல்களை தெரிவித்து ள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
தானே நகரின் மும்ப்ரா பகுதியைசேர்ந்தவர் இஷ்ரத். இவரை லஷ்கர்_இ தொய்பாவின் இந்தியபிரிவு தலைவராக கூறப்படும் முஸ்ஸமில் லஷ்கர்_இ – தொய்பாவின் தீவிரவாதபணிகளுக்காக தேர்வுசெய்திருந்தார். முஸ்ஸமில் 2007_வரை இந்தியபிரிவு தலைவராக செயல்பட்டுவந்தார் என்று ஹெட்லி ஏற்க்கனவே தெரிவித்துள்ளார்.
இஷ்கரத் ஜெஹான் உள்ளிட்ட 4பேர் குஜராத்தில் தீவிரவாதசெயல் புரிய ஊடுறுவ முயன்ற போது அவர்களை போலீஸார் தடுக்கமுயற்சித்ததாகவும், அப்போது நான்குபேரும் போலீஸாரைத் தாக்கமுயன்றதாகவும்,அப்போது நடந்தசண்டையில் இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேரும் கொல்லபட்டதாகவும் குஜராத்போலீஸ் தரப்பில் முன்பு கூறப்பட்டிருந்தது.
ஆனால் இது போலிஎன்கவுண்டர் என பின்னர் பெரும்சர்ச்சை எழுந்தது. இஷ்ரத்தின் தாயார் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குதொடர்ந்தார்.
இந்நிலையில் ஹெட்லி தெரிவித்துள்ள பலதகவல்கள், குஜராத் போலீஸார் கூறியதகவல்களுடன் ஒத்துபோவதாக தேசிய_புலனாய்வு ஏஜென்சி கருதுவதாக செய்திகள் ஏற்க்கனவே வெளியானது .
முஸ்ஸமில்தான் இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேரையும் குஜராத்துக்கு அனுப்பிவைத்ததாகவும், அங்கு முக்கிய விஐபிக்களை கொலை செய்யும் திட்டதுடன் அவர்கள் அனுப்பி வைக்கபட்டதாகவும் ஹெட்லி ஏற்க்கனவே கூறியுள்ளார்.
முஸ்ஸமில்தான் லஷ்கர் அமைப்பின் இந்தியநடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்து வந்த முக்கியதலைவர் என ஹெட்லி ஏற்க்கனவே கூறியுள்ளார்.
இஷ்ரத் சுட்டுகொல்லப்பட்டவுடனேயே அவர் தங்களது அமைப்பைசேர்ந்தவர் என அந்த அமைப்பின் செய்திதாளான காஸ்வா டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இஷ்ரத்தை கொன்றதற்க்கு குஜராத் போலீஸாரை பழிவாங்குவோம் என அதில் சூளுரைத்து கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.