மக்களிடம் மதவெறி அதிகரித்து விட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை

டெல்லியில் கடந்த சனிக் கிழமையன்று நடந்த மத ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில் போலீஸார் பலர் காயமடைந்தனர்.

இதேபோல, சமீபத்தில் வேறுசில மாநிலங்களிலும் மதமோதல்கள் தொடர்பான செய்திகள்வந்தன. இந்த சம்பவங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் முக்தார்அப்பாஸ் நக்வி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் அமைதியையும் வளர்ச்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாத சில சக்திகள், இந்தியாவின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தையும் உறுதிப்பாட்டையும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றன. மக்களிடம் மதவெறி அதிகரித்து விட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை.

தங்களது நம்பிக்கைகளைப் பின்பற்ற ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திரம் உள்ளது. மக்கள் என்ன சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடக்கூடாது என்று சொல்வது அரசின் வேலையல்ல. தங்களுக்கு விருப்பமான உணவை உண்ண குடிமக்களுக்கு உரிமைஉள்ளது. ஹிஜாப் அணிவது இந்தியாவில் தடைசெய்யப்பட வில்லை.

ஆனால், ஒரு கல்லூரியில்,நிறுவனத்தில் உடைகட்டுப்பாடுகள் இருந்தால் அங்கு சேருவோர் அதை பின்பற்றவேண்டும். விருப்பமில்லா விட்டால் வேறு இடங்களில் சேரலாம்.

இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.