வாரணாசி தொகுதியில்பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதமர் நரேந்திர மோடி, உ.பி.,யின்  வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டி யிடுகிறார். இந்ததொகுதியில் மே மாதம் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அஜய் ராயையே மீண்டும் நிறுத்தி உள்ளது. சமாஜ்வாடி கட்சி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சார்பில் சாலினி யாதவ் போட்டியிடுகிறார்.

 

மும்முனைபோட்டி நிலவுகிற வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்வதற்காக பிரதமர் மோடி, நேற்றுமுன்தினம் அங்கு சென்றார். தனது செல்வாக்கைக் காட்டும் வகையில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார்.

திறந்தவாகனத்தில் அவர் வீதிகளில் வலம் வந்த போது மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர். நிறைவில் அவர் கங்கை ஆரத்தி பூஜை நடத்தி வழிபட்டார்.

 

பிரதமர் மோடி நேற்று காலை பாரதீய ஜனதா கட்சி வாக்குச்சாவடி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் குறிப்பிடுகையில், “நாட்டில் முதல் முறையாக ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் பண்டிகை மன நிலையைபார்க்க முடிகிறது. தொண்டர்கள்தான் உண்மையான வேட்பாளர்கள். நல்லாட்சி தருவதற்காக நான் நேர்மையுடன் பாடுபட்டு வந்திருக்கிறேன். மீண்டும் மோடியின் அரசு தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த மனநிலையில் தான் இருக்கின்றனர்” என கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, “அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெற்றி பெற வேண்டியது உங்கள் பொறுப்பு. ஒரு வாக்குச்சாவடியை இழந்தால்கூட நான் வெற்றியை கொண்டாட முடியாது. எனது வாக்குச்சாவடி தான் பலமானது என்பதை ஒவ்வொருவரும் தாரக மந்திரமாக கொண்டு செயல் படுங்கள்” என குறிப்பிட்டார்.

 

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அங்குள்ள காலபைரவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்செய்தார். சாமி தரிசனம் முடித்து விட்டு அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு புறப்பட தயார் ஆனார்.

இதற்காக வாகன அணி வகுப்புடன் புறப்பட்டார். முன்னதாக அவர் சிரோமணி அகாலிதளம் கட்சித்தலைவர் பிரகாஷ்சிங் பாதல் பாதங்களை தொட்டுவணங்கி, ஆசி பெற்றார். அது சமூக ஊடகங்களில் உடனடியாக ‘டிரெண்ட்’ ஆனது.

கூட்டணி கட்சித்தலைவர்களிடம் வாழ்த்து

தொடர்ந்து அவர் கூட்டணி கட்சித் தலைவர்களான பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா), தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக்ஜனசக்தி) உள்ளிட்டவர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

மோடியின் வாகனத்தை கூட்டணி கட்சித்தலைவர்கள் சுற்றுலா பஸ்சில் பின்தொடர்ந்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் வரவேற்பு

வாரணாசியில் நேற்று 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது.

அந்த வெயிலுக்கு மத்தியிலும் மக்கள் பால் கனிகளிலும், வீட்டின் உச்சியிலும், சாலையோரங்களிலும் திரண்டுநின்று ரோஜா இதழ்களை மோடியின் மீது தூவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மீண்டும் வாரணாசிவருவேன் என்று மோடி குறிப்பிட்டார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காலை 11.20 மணிக்கு கலெக்டர் அலுவலகம் சென்றடைந்ததும் பிரதமர் மோடியை பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித்ஷா, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

வேட்பு மனு தாக்கல்

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் உடன் இருந்தனர்.

அதே போன்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

வாரணாசி மக்களுக்கு நன்றி

வேட்பு மனுவை தாக்கல்செய்தபின்னர் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். வாரணாசி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

காசி (வாரணாசி) மக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 5 ஆண்டுகளுக்கு பின்னர் காசிமக்கள் தங்களின் அன்பால் என்னை ஆசீர்வதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். காசி மக்களால்தான் நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்தது போன்று 4, 5 மணி நேரத்துக்கு ஒருபேரணியை நடத்திக்காட்ட முடியும்.

3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இன்னும் 4 கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஜனநாயக உரிமையை, சமாதானமும், நல்லிணக்கமும் உள்ள ஒருசூழலில் நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒரு பலம்வாய்ந்த அரசை அமைப்பதில் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...