இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி யிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல்செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஏப்ரல் 25-ம் தேதிதான் போட்டியிடும் தொகுதியில் மிகப் பெரும் பேரணி நடத்தினார் பிரதமர் மோடி. வாரணாசியில் தனக்குள்ள செல்வாக்கை காட்டுவதற்காகப் பேரணி நடத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது. இந்த மெகாபேரணியில் பாஜக தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், கூட்டணிக் கட்சி தலைவர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்ற ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து நேற்று பெரும்படையை திரட்டிச் சென்று வேட்பு மனுத் தாக்கல்செய்தார் மோடி. அதற்கு முன்னதாக தன் வேட்புமனுவைப் பெண் ஒருவரிடம் அளித்து அவரின் காலில் விழுந்து வணங்கினார். பிரதமர் காலில் விழுந்துவணங்கிய அந்தப் பெண் யார் என்ற கேள்வி நேற்று முதல் சமூகவலைதளங்களைச் சுற்றி வருகிறது. தற்போது அவரை பற்றியதகவல்கள் வெளிவந்துள்ளன.
அன்னபூர்ணா சுக்லா என்ற 91 வயதான கல்வியாளரிடம்தான் மோடி ஆசிபெற்றார். வாரணாசியில் மோடி போட்டியிடுவதற்கு முன் மொழிந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவருமான பண்டிட் மதன்மோகன் மால்வியாவின் வளர்ப்பு மகள். அன்னபூர்ணா நாற்பது ஆண்டுகளாகக் காசியில் உள்ள ஒருகல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது அவருக்கு 91 வயது ஆனபோதிலும் சமூகப் பணிகளை மிகவும் ஆர்வமாகச் செய்து வருகிறார்.
இதுபற்றி இந்தியா டுடே பத்திரிகைக்கு அன்னபூர்ணா அளித்துள்ள பேட்டியில், “நான் ஒருதாயை போலத்தான் மோடியை ஆசீர்வாதம் செய்தேன். அவர் உணர்ச்சிவசப் பட்டார். பின்னர் என் காலில் விழுந்தார். கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி நிறையபணிகளை செய்துள்ளார். வாரணாசியில் இருந்த போக்குவரத்து சீரமைக்கப் பட்டுள்ளது. சாலைகள் அகலப்படுத்த பட்டுள்ளன. அவரின் வளர்ச்சிப் பணி தொடர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
3bombast