டைம்’ செய்தி இதழ் கட்டுரை பின்னணியில் பாகிஸ்தான்

பிளவுவாதிகள் தலைவர் என்று, பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் ‘டைம்’ செய்தி இதழ் குறிப்பிட்டு, அட்டை படக் கட்டுரை வெளியிட்டுள்ளதன், பின்னணியில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் இருப்பது தெரியவந்துள்ளது.

டைம் இதழில் பிரதமர் நரேந்திரமோடி அட்டைப்படத்துடன் பிளவு வாதிகளின் தலைவர், என்ற தலைப்பில் வெளியான செய்திகட்டுரை இந்திய அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது.

இந்தியாவில் சிறுபான்மையினர் நலன்கள் மோடி ஆட்சியில் பாதிக்கப் பட்டதாகவும், மாநில சுயாட்சி நசுக்க பட்டதாகவும், அந்த கட்டுரையில் குற்றஞ்சாட்ட பட்டிருந்தது. இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித்பத்ரா இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தகட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஆதிஷ்தஷீர் என்பவர், பாகிஸ்தானை சேர்ந்தவர். பாகிஸ்தானிடமிருந்து வேறுமாதிரியான கட்டுரையை நாம் எதிர்பார்க்க முடியாது.

 

மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான்தஷீர் மற்றும் இந்திய பத்திரிகையாளர் தவ்லீன்சிங் ஆகியோரின் மகன்தான் இந்த கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர். மோடி அரசின்கீழ் இந்தியா புதுப்பொலிவு பெற்றுள்ளது. சீரமைப்பு செயல்பாடு போன்றவை மோடி ஆட்சியில் உறுதி செய்யபட்டுள்ளன. மணப்பெண் கையில் உள்ள வளையலைப் போலதான், மோடியும், வேலை பார்ப்பது போன்ற சத்தம்வருகிறது, ஆனால், வேலை நடப்பதில்லை என காங்கிரஸின் நவ்ஜோத்சிங் சித்து கூறியுள்ளார். இது காங்கிரசின் மனநிலையை காட்டுகிறது. இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...