அத்வானி போன்ற தலை வர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி சாதகமாகி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிபெற்று பிரதமராக மோடி மீண்டும் விரைவில் பதவி ஏற்க உள்ளார். அவர் இன்று பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷியை அவர்களது வீட்டில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் சந்தித்து ஆசிபெற்றனர்.
அத்வானியை சந்தித்தபின்னர் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: மரியாதைக் குரிய அத்வானியை சந்தித்தேன். பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றிக்கு, பல ஆண்டுகளாக அத்வானி போன்ற தலைவர்கள் கட்சியை கட்டமைத்ததும், மக்களுக்கு புதியகொள்கைகளை அளித்ததுமே காரணம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தபின்னர் மோடி வெளியிட்ட அறிக்கை:
டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, அறிஞர், நன்கு படித்தவர். இந்திய கல்வியை மேம்படுத் துவதில் அவரின் பங்களிப்பு முக்கியமானது. அவர் எப்போதும், பா.ஜ.,வை பலப்படுத்த பணி யாற்றினார். என்னை போன்ற ஏராளமான தொண்டர்களுக்கு முன் மாதிரியாக இருந்தார். இன்று காலை அவரை சந்தித்து ஆசிபெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
லோக் சபா இதுவரை இல்லாத வெற்றியை, பா.ஜ.,வுக்கு பெற்றுத் தந்த, பிரதமர், மோடி மற்றும் கட்சித் தலைவர், அமித் ஷாவுக்கு, அத்வானி பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கை:நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு இதுவரை இல்லாதவகையில், அமோக வெற்றி பெற்றுத்தந்த, பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., தலைவர் அமித்ஷா தலைமையில், அயராது பாடுபட்ட, கட்சித் தொண்டர்களுக்கும் என் நன்றி.நம் சிறந்தநாடு, வருங்காலத்தில் பிரகாசமான எதிர்காலத்தைப் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு, அத்வானி தெரிவித்துள்ளார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |