மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சியில் இருந்து பாஜ.,கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அணிமாறுவது தொடர்ந்து வருகிறது.
இன்று புதன்கிழமை முனிருல் இஸ்லாம் எனும் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு கட்சி தாவியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகி 2017இல் பாஜகவில் இணைந்த முகுல் ராயின் மகன் சுப்ரான்ஷு ராய் மற்றும் துஷார் காண்டி பட்டாச்சார்யா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 50க்கும் அதிகமான கவுன்சிலர்கள், நேற்று திரிணாமுல் காங்கிரஸ்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று இந்த நிகழ்வு நடந்துள்ளது.
தீதியின் (மம்தா பானர்ஜி) அகந்தையால் திரிணாமுல் காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. மோதியின் தலைமையின்கீழ் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவோம்,” என்று முகுல்ராய் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவேந்திரராய் எனும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் பாஜகவில் இணைந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத்தொகுதிகளில் பாஜக 18 இடங்களிலும், திரிணாமுல் 22 இடங்களிலும் வென்றன. 2014இல் பாஜக அங்கு இரண்டுதொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |