நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்வெற்றி பெற்றது. பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். கடந்த மோடி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். இந்தமுறையும் அவர் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு விபிசிங், வாஜ்பாய் அமைச்சரவையிலும் மத்திய அமைச்சராக செயல்பட்டிருக்கிறார்.
ஆனால், இந்தமுறை மேனகா காந்தி மத்திய அமைச்சராக நியமிக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட அவர், சபாநாயகராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சபையில் நீண்டகாலம் அனுபவம் உள்ளவர்களை சபாநாயகராக நியமிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் 8 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ள மேனகா, சபாநாயகராக நியமிக்கபட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் பதவியை கருத்தில் கொண்டுதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மேனகா காந்தி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டால், மீராகுமார், சுமத்ராமகாஜன் ஆகியோருக்கு பிறகு மூன்றாவது பெண் சபாநாயகர் என்ற பெயரை மேனகாகாந்தி எடுப்பார். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒருபெண் சபாநாயகராகப் பதவியேற்ற பெருமையும் கிடைக்கும்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |