தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவிதொகையை உயர்த்த வழங்கிட பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த முதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, நேற்று (30ம் தேதி) ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.
இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல்கூட்டம், 31ம் தேதி மாலை நடைபெற்றது. இந்தகூட்டத்தில், தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் வழங்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஆண்டுதோறும் 500 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்த திட்டத்தில் மாணவர்களுக்கான உதவி தொகையான ரூ.2 ஆயிரத்தை 2,500 ஆக உயர்த்துவது மற்றும் மாணவி களுக்கான நிதி ரூ.2 ஆயிரத்து 250 லிருந்து 3 ஆயிரமாக உயர்த்துவது என முடிவு செய்யப் பட்டது.
மேலும் நக்சல்கள், பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியாகும் வீரர்களின் குழந்தை களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவது, நிதி வழங்குவதை மாநில போலீசாரின் குழந்தைகளுக்கும் விரிவு படுத்துவது என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |