அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கட்சிமாநாட்டில் கட்சி அலுவலக தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அமித்ஷா கட்சித் தலைவர்களிடயே பேசும் போது, ‘‘303 இடங்களை கைப்பற்றி பெரும்பான் மையோடு நாம் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றிக்கான உச்சத்தை இன்னும் அடைய வில்லை. 2014-ம் ஆண்டு பாஜக தேசிய ஆலோசனை கூட்டத்தில் பேசிய போதும் இதை நான் கூறினேன், தற்போதும் கூறுகிறேன் நம்கட்சி இன்னும் சிறந்த நிலையை அடையவேண்டும்’’.
கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல நாம் நம்மையே அர்ப்பணிக்க வேண்டும்.
2014-ம் ஆண்டு, ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் பாஜக இரண்டு நாள் தேசியநிர்வாக கூட்டத்தில் உரையாற்றும்போது, 2014 பொதுத் தேர்தலுக்குபிறகு பாஜக அதன் உச்சநிலையை அடைந்ததாக மக்கள் பலர் கூறினர், ஆனால் அதுஅவ்வாறு இல்லை. 2017-ம் ஆண்டு உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தபோதும் பாஜக தனது உச்சநிலையை அடைந்துள்ளது என கருத்துக்கள் வந்தது. ஆனால் அப்போதும் அவ்வாறுஇல்லை.
“அனைத்து மாநிலங்களிலும் பாஜக. முதல் மந்திரிகள் ஆட்சி செய்யும் போது தான், அதன் உச்சத்தை அடையும். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம்வரை பாஜக-விற்கு தொண்டர்கள் உள்ளனர்”
அமித் ஷா
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |