ஈழ விவகாரத்தில் எது தர்மமோ? அதை மிக சரியாக செய்வார் மோடி

மிகமுக்கிய செய்தியினை பெட்டி செய்தியாக கூட போட மன மில்லாமல் மறைக்கின்றன தமிழக மீடியாக்கள்

ஒரு டிவியிலும் அதுபற்றி விவாதமில்லை, செய்தியில்லை ஏன் ஒரு வார்த்தையுமில்லை, ஆம், இலங்கையில் மிகபெரும் காரியத்தை செய்யும் முகமாக காய்களை நகர்த்துகின்றார் மோடி

இலங்கை தமிழர் சிக்கலுக்கு அந்நாட்டு 13ம் பிரிவு சட்டத்தில் திருத்தம் செய்யபட வேண்டும் என வாய் மொழியாக பேசதொடங்கிய காலத்தில் கொல்லபட்டார் இந்திரா

ராஜிவ்காந்தி முரண்டு பிடித்த ஜெயவர்த்தனவேவினை மிரட்டி அழைத்து வந்து அந்த 13ம் சட்ட பிரிவுஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார் ராஜிவ்காந்தி

சிங்களம் அதை எதிர்த்து கொதித்தது, பிரபாகரனும் அதையே செய்தார்

பிரபாகரனை தூண்டிவிட்ட பிரேமதாசா அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய சொன்னான், அதைவிட அதிகம் தருவதாக ஆசைகாட்டினான்

பிரபாகரனும் அதை நம்பி இந்திய படைகளுடன்  மோதினார். அத்தோடு 32 ஆண்டுகாலமாக யாரும் அந்த ஒப்பந்தம் பற்றி பேசவில்லை, ஏன் பலருக்கு மறந்தே போயிற்று. தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கும் அதேமறதி

அந்த சட்டதிருத்தம் தனி நாடு அனுமதிக்காது ஆனால் பல உரிமைகளுக்கு வழி செய்யும். ராஜிவுக்குபின் வந்த பிரதமர்கள் யாரும் அதை தொடவில்லை. ஆனால் மோடி இரும்பு மனிதர் அல்லவா?, நாட்டுக்கு எதுதேவை, எதை செய்தால் என்ன பலன் என்பதை மிக கவனித்து செய்யும் ஆற்றலுள்ள பிரதமர் அல்லவா?

அவர் அந்த விவகாரத்தை தூசு தட்டி எடுக்கின்றார்.

13ம் சட்டதிருத்தத்தை மோடி இலங்கைக்கு அழுத்தம்கொடுத்து தீர்க்க வாய்பிருப்பதாக உலகம் கருதுகின்றது

இலங்கை தமிழ் தலைவர்களை தன்னை வந்து சந்திக்க அழைப்பு விடுத்திருக்கின்றார் என்பது உலகம் கவனிக்கும் செய்தி

1984ல் இந்திரா காலத்தில் அமிர்தலிங்கத்தை அழைத்தபின் மோடிதான் அதை செய்கின்றார்

சிங்களம் ஆடிபோய் இருக்கின்றது, இலங்கையில் பொட்டுவெடி வெடித்தாலும் பொங்கும் தமிழக ஊடகங்களும், அரசியல் இம்சைகளும் இப்பொழுது மாபெரும் அமைதி

இலங்கை தமிழருக்கு நல்ல தீர்வு கிடைப்பது இவர்களுக்கு விருப்பமா என்றால் இல்லை, நிச்சயம் இல்லை

ஆனால் இவர்களால் தீர்வு கொடுக்கமுடியுமா என்றால் அது சுத்தமாக முடியாது

தீர்வினை மத்திய அரசு ஒன்றாலே கொடுக்கமுடியும், அவ்வகையில் மோடியிடமே அதிகாரம் இருக்கின்றது, இனி தமிழக ஈழ அல்ட்ராசிட்டிகள் என்ன செய்யும் தெரியுமா? இதெல்லாம் வேண்டாம் தனிஈழம் பிரித்துகொடு என சொல்லி மக்களை குழப்பியடிப்பார்கள்

நிச்சயம் செய்வார்கள் இவர்களுக்கு எந்த சிக்கலும் தீரவே கூடாது என்பதில் அக்கறை அதிகம்.. அப்படி இவர்கள் தனிநாடே தீர்வு என கிளம்புவார்களாயின் இவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு இலங்கை காரியத்தை நோக்கலாம்

மாபெரும் ஈழதீர்வினை நோக்கி மோடி நகரும்நேரம் தமிழகத்தில் ஒருகுரல் ஆதரவில்லை, ஒருபத்திரிகை செய்தியில்லை , ஒரு அரசியல்வாதி சத்தமில்லை

இவர்களின் கள்ளதனத்தையும், திருட்டு அரசியலையும் கண்டு நாணத்தால் தலை குனிகின்றோம், இவர்களால் தமிழகத்துக்கு ஒருநன்மையும் கொண்டுவர முடியாது அதற்கு இவர்கள் விரும்பகூட இல்லை எனும்பொழுது ஆத்திரத்தில் மனம் கசக்கின்றோம்

வராது வந்த மாமணியாக வந்தபெருமான் மோடி, இதுவரை யாரும் 32 வருடமாக தொடாத அந்த சிக்கலை ஈழதமிழருக்காக தொடுவது வாழ்த்துகுரியது

ஈழமக்களுக்கு ஏதும் நல்லது செய்யவேண்டும் என்ற மனமுள்ளவர்கள் இப்பொழுது மோடியினை நோக்கி வணங்குகின்றார்கள்..

எதுசாத்தியமோ? எது நீதியோ? எது தர்மமோ? அதை மிக சரியாக ஈழ விவகாரத்தில் செய்கின்றார் மோடி

வாழ்க நீ எம்மான்

“நீ செல்லும் இடமெல்லாம் நியாயங்கள் அரங்கேறும்…தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர்தூவும்.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...