யோகாசனத்துக்கு சர்வதேசளவில் புகழைப்பெற்றுத் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் வெள்ளிக்கிழமை அந்த மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்று யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் என்ற அறிவிப்பை கடந்த 2014 டிசம்பர் 11-ஆம் தேதியன்று ஐ.நா. அறிவித்தது. இதற்கானயோசனை அளித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவின் பாரம்பரியமான யோகாவின் மூலம் சர்வதேச சமுதாயம் பயனடையவேண்டும் என்ற நோக்கில் மோடி மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிகிடைத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் யோகாவுக்கு பெரும் புகழை மோடி பெற்றுத்தந்துள்ளார். இதன்மூலம் நமது கலாசாரத்தின் பெருமையை உலகம் உணர்ந்துள்ளது. யோகா மூலம் ஒட்டுமொத்த உலகமே இந்தியாவின் பக்கம் ஈர்க்கப் பட்டுள்ளது.
யோகா செய்வதால் என்ன கிடைத்துவிட போகிறது என்று இப்போது சிலர் கேள்வி எழுப்பு கின்றனர். இந்த நாளில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக் கணக்கான மக்கள் இணைந்து யோகாசன பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகமக்களை ஒன்றிணைக்கும் கருவியாக நமது யோகா உயர்த்தப் பட்டுள்ளது. கோடிக் கணக்கான மக்கள் யோகாசனத்தை தங்கள் வாழ்வின் ஒருபகுதியாக மாற்றி கொண்டுள்ளனர். யோகாவின் நன்மையை அவர்கள் முழுமையாக உணர்ந்துள்ளதே இதற்குக்காரணம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதுக்களும், முனிவர்களும் மட்டுமே யோகாசன பயிற்சி செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. பிற்காலத்தில் அதன் நன்மையை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் யோகாவில் ஈடுபட்டனர். கடந்த 2014-ஆம் ஆண்டில்தான் யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
சர்வதேச யோகாதினத்தை ஐ.நா. மூலம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்த 70 நாள்களில் 177 நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டன. அதன் விளைவாக இப்போது உலகம் முழுவதும் யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. இதனை சாமானிய மக்களுக்கும் கொண்டுசெல்லும் பணியில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனம், உடல் நலனைக் காக்க யோகாவைப் போன்ற சிறந்தகருவி வேறு எதுவும் இல்லை என்றார் அமித் ஷா.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |